தமிழ்நாடு

tamil nadu

சுருளி அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி!

By

Published : May 12, 2023, 12:41 PM IST

சுருளி அருவிக்கு செல்ல தடை நீக்கம்! வனத்துறை அறிவிப்பு.

தேனி:தேனி மாவட்டம், கம்பம் அருகே சுருளி அருவி அமைந்துள்ளது. இந்த அருவி தேனி மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகும். இங்கு, தேனி மாவட்டம் மட்டுமன்றி பிற மாவட்டங்களிலிருந்தும் மற்றும் அண்டை மாநிலமான கேரளா, ஆந்திரா மற்றும் கர்நாடகாவிலிருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் மற்றும் பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். மேலும், விடுமுறைக் காலம் என்பதால் மக்கள் குடும்பமாக வந்து அருவியில் ஆனந்தமாகக் குளித்து மகிழ்வர்.

ஆனால், சுருளி அருவி நீர் பிடிப்பு பகுதியில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஏற்பட்ட தொடர் கனமழையினால் சுருளி அருவியில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், சுருளி அருவியில் குளிப்பதற்கும், செல்வதற்கும் வனத்துறையினர் தடை விதித்தனர். ஆனால், தற்போது அருவி நீர் பிடிப்பு பகுதிகளில் நீர் வரத்து குறைந்து சீரானதால், சுருளி அருவிக்கு மீண்டும் செல்ல பொதுமக்களுக்கு அனுமதியை வனத்துறையினர் அறிவித்துள்ளனர். இதனால் மக்கள் மனமகிழ்வோடு சுருளி அருவிக்குச் செல்வதைக் காண முடிகிறது.

இதையும் படிங்க:நமக்கு நாமே திட்டம்: பட்டியலின, பழங்குடியினர் அதிகம் வசிக்கும் பகுதிகளில் மக்கள் பங்களிப்பு குறைப்பு

ABOUT THE AUTHOR

...view details