தமிழ்நாடு

tamil nadu

மழை காலம் ஆரம்பிச்சுருச்சு.... இத பண்ண மறந்துறாதீங்க!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 23, 2023, 9:57 AM IST

Northeast Monsoon Precautions in tamil: வடகிழக்கு பருவ மழை தற்போது தொடங்கிய நிலையில் இதை எதிர்கொள்வதற்கு மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்னென்ன என்பதைப் பார்க்கலாமா...

வட கிழக்கு பருவ மழை தற்போது தொடங்கிய நிலையில் இதை எதிர்கொள்வதற்கு மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்னென்ன என்பதைப் பார்க்கலாமா.
வட கிழக்கு பருவ மழை தற்போது தொடங்கிய நிலையில் இதை எதிர்கொள்வதற்கு மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்னென்ன என்பதைப் பார்க்கலாமா.

சென்னை:அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலம் வட கிழக்கு பருவமழைக் காலம் என்று அழைக்கப்படுகிறது. இது பின்பருவமழைக் காலம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த வருடம் வடகிழக்கு பருவ மழை ஒருநாள் முன்னதாகவே துவங்கிவிட்டது. இதை எதிர்கொள்வதற்கு என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று பார்க்கலாமா...

மின்சாரப் பொருட்களில் கவனம்:இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யும் போது, மொபைல் போன், பவர் பேங்க் போன்றவைகளில் சார்ஜ் செய்வதை அறவே தவிர்க்க வேண்டும். மேலும் மழையின் போது டிவி உள்ளிட்ட பொருட்களை ஆப் செய்து வைப்பது நல்லது. அதீத மழையின் போது செல்போன் பேசுவதை தவிர்க்க வேண்டும்.

மழை பெய்யும் போது மொபைல் சார்ஜ் செய்வதைத் தவிர்க்க வேண்டும்

மெழுகுவர்த்தி வேண்டும்:மழையின் போது அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்படும். ஆகையினால் மெழுகுவர்த்தி, டார்ச் லைட் போன்றவற்றை முன்கூட்டியே எடுத்து வைப்பது தக்க சமயத்தில் உதவும்.

மழைக்காலத்தில் மெழுகுவர்த்தி வாங்கி வைப்பது நல்லது

குடை, ரெயின் கோர்ட் எடுத்து செல்வது நல்லது:இனி வரும் நாட்களில் எப்போது வேண்டுமானாலும் மழை பெய்யும் என்பதால், வெளியில் செல்லும் போது கட்டாயம் குடை, ரெயின் கோர்ட் போன்றவற்றை எடுத்து செல்வது அவசியம்.

வெளியில் செல்லும் போது குடை எடுத்து செல்வது அவசியம்

செல்போனுக்கு கவர்:மழையில் இருந்து நம்மை பாதுகாப்பது போல, எலக்ட்ரானிக் பொருட்களான செல்போன், இயர் பட்ஸ், ஸ்மார்ட் வாட்ச் போன்றவைகளை பாதுகாக்க வேண்டும். ஆகையினால் வெளியில் செல்லும் போது, நீர் உள்ளே புகாதவாறு உள்ள கவர்களை எடுத்துச் செல்வது நல்லது. மழை பெய்யும் போது கையில் உள்ள எலக்ட்ரானிக் பொருட்களை கவரினுள் போட்டு, பாதுகாப்போடு கொண்டு வரலாம்.

போர்வை, பெட் போன்றவற்றை துவைத்து வைக்க வேண்டும்:மழை தொடங்கிவிட்ட பின் துணிகளை துவைத்து காய வைப்பதே கடினம். இந்த நிலையில் போர்வை, பெட் போன்றவற்றை துவைத்து காய வைப்பது என்பது மிகவும் கடினம். ஆகையினால் போர்வை, பெட் போன்றவற்றை முன்கூட்டியே துவைத்து காயவைத்து மடித்து வைப்பது சிறந்தது.

துணிகளை நன்றாக காய வைக்க வேண்டும்:துணிகளை ஈரப்பதம் இல்லாமல் காய வைத்து பயன்படுத்த வேண்டும். இல்லாவிடில் துணிகளில் பூஞ்சை பரவி, நோய் பரவும் அபாயம் உள்ளது.

சூப், கசாயத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி வைப்பது நல்லது:மழைக்காலத்தில் அடிக்கடி சளி, இருமல் போன்ற நோய்கள் ஏற்படும் என்பதால் சூப் மற்றும் கசாயம் செய்து குடிப்பது நல்லது. ஆனால் மழையின் போது அடிக்கடி கடைக்கு செல்ல முடியாததால் சூப் மற்றும் கசாயம் செய்வதற்கு தேவையான பொருட்களை முன்கூட்டியே வாங்கி வைப்பது சிறந்தது.

குளிருக்கு ஜர்கின், ஸ்வட்டர் எடுத்து வைங்க: மழைக்காலத்தில் குளிர் அதிகமாக இருக்கும் என்பதால் குளிருக்கு உதவும் ஜர்கின், ஸ்வட்டர் போன்றவற்றை முன்கூட்டியே எடுத்து வைப்பது அல்லது வாங்கி வைப்பது நல்லது.

மழைநீர் தேங்காமல் பார்த்து கொள்ள வேண்டும்: வீடுகளிலும், வீட்டை சுற்றிலும் மழைநீர் தேங்காதவாறு பார்த்து கொள்ள வேண்டும். வீடுகளில் ஆட்டு உரல், தேங்காய் சிரட்டை, பயனற்ற வாளி, டப்பாக்கள் உள்ளிட்ட பொருட்கள் வெளியில் இருப்பின் அவற்றை கவிழ்த்து வைப்பது கொசு உருவாகாமல் தடுக்கலாம்.

கொசு வலைகளை அமைக்கலாம்:மழைக்காலத்தில் கொசுக்களின் ஆதிக்கம் அதிகம் இருக்கும் என்பதால் வீடுகளில் கொசு வலைகளை அமைப்பது சிறந்தது. இது டெங்கு, மலேரியா போன்ற கொசுக்களால் உருவாகும் நோய்த் தொற்றுகளை கட்டுப்படுத்த உதவியாக இருக்கும்.

இதையும் படிங்க:இத மட்டும் பண்ணா போதும்... உங்க ஃபிரிட்ஜ்ஜை அடிக்கடி க்ளீன் பண்ண தேவையே இல்லை!

ABOUT THE AUTHOR

...view details