தமிழ்நாடு

tamil nadu

இர்ரெகுலர் பீரியட்ஸா.. இனி டோன்ட் வொரி.. இதை ட்ரை பண்ணுங்க!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 27, 2023, 7:26 PM IST

Updated : Oct 27, 2023, 8:18 PM IST

How to prevent irregular period problems in Tamil: இன்றைய காலக்கட்டத்தில் இளம்பெண்களிடையே அதிகம் காணப்படும் ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்சினைகளை, சில உணவுகளை உட்கொள்வதன் மூலம் சரிசெய்யலாம். எந்தெந்த உணவுகள் ஒழுங்கற்ற மாதவிடாயை சரி செய்யும் என்று பார்க்கலாம்.

How to prevent irregular period problems
How to prevent irregular period problems

சென்னை:இன்றைய இளம்தலைமுறை பெண்கள் ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்சினையால் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். மாதவிடாய் சுழற்சி 28 நாட்களில் நடக்கும். சில நேரங்களில் 26 - 32 நாட்களுக்குள் நடக்கும். 40 நாட்களாகியும் மாதவிடாய் வராமல் இருப்பது, 2 இருமாதங்களாகியும் மாதவிடாய் வராமல் இருப்பது போன்ற நிலை ஒழுங்கற்ற மாதவிடாய் (Irregular Periods) என்றழைக்கப்படுகிறது.

வேலை பளு காரணமாக பல பெண்கள் இதை கவனிக்க தவறிவிடுகின்றனர். பீரியட் டிராக்கர் செயலியைப் பயன்படுத்தி உங்களுக்கு ஏற்படும் மாதவிடாய் சுழற்சி காலத்தை கணக்கிட்டு கொள்ளலாம்.உணவுமுறைகள் மற்றும் சில செயல்முறைகள் மூலம் இந்த ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்சினையை சரி செய்ய முடியும்.

இஞ்சி (Ginger):இஞ்சியை உணவில் எடுத்து கொள்ள வேண்டும். இஞ்சி டீயாகவும் குடிக்கலாம்.இஞ்சியில் உள்ள விட்டமின் சி மற்றும் மெக்னீசியம் கருப்பை சுருங்க உதவுகின்றன. இதன் காரணமாக மாதவிடாய் வெளிப்படும்.

பப்பாளிக்காய் (Raw Papaya): பப்பாளிக்காயை உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் மாதவிடாயை சீராக்கலாம். பப்பாளிக்காயில் உள்ள பாப்பை என்ற என்சைம் பெண்களின் ஹார்மோன்களை சீராக்க உதவுகிறது. மேலும் இதில் உள்ள கரோட்டின் மாதவிடாய்க்கு காரணமான ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனை தூண்டுகிறது.

இலவங்கப்பட்டை (Cinnamon):பட்டை உடலை வெப்பமாக்க உதவுகிறது. மேலும் இரத்த ஓட்டத்தை அதிகரித்து, மாதவிடாய் தோன்றுவதற்கு உதவுகிறது.

கற்றாழை (Aloevera): கற்றாழை ஹார்மோன்களை கட்டுப்படுத்தவும், நிர்வகிக்கவும் உதவுகிறது. ப்ரஷான கற்றாழை ஜெல்லோடு ஒரு ஸ்பூன் தேன் கலந்து சாப்பிடுவது நல்ல ரிசல்டை தரும். காலை உணவுக்கு முன்பு சாப்பிட வேண்டும்.

மஞ்சள் (turmeric): மஞ்சளில் பல மருத்துவ குணங்கள் உள்ளன. இரவு படுக்கும் முன் சூடான பாலில் சிறிது தேன் கலந்து சாப்பிட்டால், மாதவிடாயினால் வரும் வலிகளும் குணமாகும்.

அன்னாசி பழம் (Pine Apple): அன்னாசி பழத்தில் ப்ரோமெலைன் என்ற நொதி உள்ளது. இது மாதவிடாய் தோன்றுவதற்கு உதவி புரியும். இரத்த அணுக்களின் உற்பத்தியை அதிகரித்து, இரத்த ஓட்டத்திற்கு உதவுகிறது.

கொத்தமல்லி (Coriander Leaves):உணவுகளை அலங்கரிப்பதற்கு பயன்படுத்தப்படும் கொத்தமல்லி இலைகள் மாதவிடாய் பிரச்சினைக்கு மிகச்சிறந்த தீர்வாகும். இது உடலின் இரத்த ஓட்டத்தை அதிகரித்து, மாதவிடாய் சுழற்சியை ஒழுங்குப்படுத்த உதவுகிறது. கொத்தமல்லி மிகவும் சிறந்தது.

இதையும் படிங்க:கர்பிணிகளுக்கான ட்யட் பற்றி தெரியுமா?... ஆரோக்கியமான குழந்தை பிறக்க இத ஃபாலோ பண்ணுங்க!

Last Updated :Oct 27, 2023, 8:18 PM IST

ABOUT THE AUTHOR

...view details