தமிழ்நாடு

tamil nadu

ஆல்பா, டெல்டா, ஓமைக்ரான் பாதிப்பிலிருந்து காக்கும் கரோனா தடுப்பூசிகள்

By

Published : Nov 23, 2022, 10:37 PM IST

கரோனா தொற்றின்போது செலுத்திய தடுப்பூசிகள் ஆல்பா, டெல்டா, ஓமைக்ரான் பாதிப்பின்போது 60 சதவீதம் முதல் 94 சதவீதம் வரை பாதுகாப்பை வழங்கியுள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது.

Covid vaccine provides substantial protection against reinfection: Study
Covid vaccine provides substantial protection against reinfection: Study

லண்டன்: கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு முதல்முறையாக தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் ஆல்பா, டெல்டா, ஓமைக்ரான் பாதிப்பின்போது குறைந்தளவு பாதிப்பையே எதிர்கொண்டுள்ளனர். குறிப்பாக ஆல்பா, டெல்டா, ஓமைக்ரான் தொற்று காலத்தில் 60 சதவீதம் முதல் 94 சதவீதம் நோயெதிர்ப்பு திறனுடன் இருந்துள்ளனர் என்று பிளோஸ் மருத்துவ இதழில் வெளியிடப்பட்ட ஆய்வின் முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. டென்மார்க்கில் உள்ள ஸ்டேட்டன்ஸ் சீரம் இன்ஸ்டிட்யூட் ஆராய்ச்சியாளர்கள், 2020ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் 2022ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வரை டென்மார்க்கில் உள்ள மக்களின் தொற்று பாதிப்பு மற்றும் தடுப்பூசி தரவுகளை பகுப்பாய்வுக்கு உட்படுத்தினர்.

மொத்தமாக 2,00,000 பேரிடம் ஆய்வு நடத்தப்பட்டது. கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தியப் பின் நோயெதிர்ப்பு திறன் எவ்வாறு உள்ளது என்பது குறித்து கண்காணிக்கப்பட்டுவந்தது. இவர்களுக்கு ஆல்பா தொற்று பரவலின்போது 71 சதவிகிதமும், டெல்டா தொற்று பரவலின்போது 94 சதவிகிதம், ஓமைக்ரான் பரவலின்போது 60 சதவிகிதமும் கூடுதல் பாதுகாப்பை தடுப்பூசிகள் வழங்கியுள்ளன என்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. அந்த வகையில் சுமார் 9 மாதங்கள் வரை 71 சதவிகித பாதுகாப்பை தடுப்பூசிகள் வழங்கியுள்ளன.

இதுகுறித்து ஸ்டேட்டன்ஸ் சீரம் இன்ஸ்டிட்யூட் ஆராய்ச்சியாளர் கேட்ரின் ஃபைண்டரப் நீல்சன் கூறுகையில், எங்கள் ஆய்வில் கரோனா தாக்கத்திற்கு பின்பு தடுப்பூசி செயல்திறன் எவ்வாறு உள்ளது என்பதை துள்ளியமாக கண்டறிந்துள்ளோம். இயற்கையாக நோய் எதிர்ப்பு சக்தி கொண்டவர்களுக்கும் தடுப்பூசி கூடுதல் பாதுகாப்பை வழங்கியுள்ளது. இருப்பினும் சிலருக்கு உயிரிழப்பு, கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. ஏற்கனவே நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கே பொருந்துகிறது. பொது சுகாதாரக் கண்ணோட்டத்தில், தடுப்பூசிகளின் செயல்திறன் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் தொடர்ந்து பாதுகாப்பாக உள்ளனர் எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:இந்தியாவில் 6.8 லட்சம் மக்களை கொன்ற 5 வகையான பாக்டீரியாக்கள்

ABOUT THE AUTHOR

...view details