தமிழ்நாடு

tamil nadu

ரத்தப் புற்றுநோய் நோயாளிகளையும் காப்பாற்றும் கோவிட் தடுப்பூசி

By

Published : Dec 24, 2022, 1:00 PM IST

ரத்தப் புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களையும் கரோனா தடுப்பூசி தொற்று பாதிப்பில் இருந்து காப்பாற்றுமென சமீபத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

இரத்தப் புற்று நோய் நோயாளிகளையும் காப்பாற்றும் கோவிட் தடுப்பூசி!
இரத்தப் புற்று நோய் நோயாளிகளையும் காப்பாற்றும் கோவிட் தடுப்பூசி!

ஜெர்மனி:பொதுவாகவே மிகவும் குறைவான நோய் எதிர்ப்பு சக்திகொண்ட ரத்தப் புற்றுநோயாளிகளுக்கு கரோனா தொற்றின் பாதிப்பு அதிகமாக உள்ளது. இவர்களுக்கு வழங்கப்படும் பல்வேறு புற்றுநோய் சிகிச்சைகளால் ’SARS-cov-2' தொற்றுக்கு எதிராக எதிர்ப்பு சக்தியை உடலில் வளர்க்க முடியாமல் போகிறது. ஆனால், கரோனா தடுப்பூசிகள் ‘T Cells' எனப்படும் நெடுங்கால எதிர்ப்பு சக்தி செல்களின் செயல்பாடுகளை அதிகரிக்கப்பதால் ரத்தப்புற்றுநோய் நோயாளிகளுக்கு பயன்பெறும் வகையில் உள்ளன.

இதுகுறித்து பல மாதங்களாக மூன்று தவணை தடுப்பூசிகளையும் செலுத்திக்கொண்ட ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களை சோதனை செய்து ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த ஆய்வு ‘B cell lymphoma' மற்றும் ‘Multiple myeloma' என்கிற இருவகை ரத்தப் புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களிடையே நடத்தப்பட்டது.

இதன் முடிவில் ஆய்வாளர் கூறியாதாவது, “இந்த ஆய்வின் முடிவுகள் படி அனைத்து நோயாளிகளுக்கும் கோவிட் தடுப்பூசிக்குப் பிறகு வலுவான ’T cell' செயல்படுகள் உள்ளது. ஆனால், அவர்களின் சிகிச்சையின் காரணமாக அவர்களின் உடலில் தனிப்பட்ட எந்த ஒரு எதிர்ப்பு சக்தியையும் வெளிப்படுத்த முடியாமல் போகிறது. இருப்பினும் தடுப்பூசி செலுத்தப்பட்டத்தையடுத்துநோய் எதிர்ப்பு சக்தி மற்ற நோயாளிகளை விட அதிகமாக உருவாகிறது.

இந்த ஆய்வுக்குழு தடுப்பூசிக்கு பிறகு உண்டாகும் ஆண்டிபாடிகளை மட்டும் ஆய்வு செய்யாமல், அதனின் தரத்தையும் சோதனைக்குள்ளாக்குவதில் வல்லுநர்கள் இதனை கண்டறிந்துள்ளனர். இதுகுறித்து பேராசிரியர் ஆலிவர் கெப்பலர் கூறுகையில் “கோவிட் 19 தடுப்பூசி ரத்தப் புற்று நோய் நோயாளிகளுக்கிடையே தொற்று நோய்க்கு எதிராக பரந்த எதிர்ப்பு சக்தியை உருவாக்கும். முதல் தடுப்பூசியின்போது குறைந்த ஆன்டிபாடிகளே செயல்பட்டாலும், 2ஆவது 3ஆவது தடுப்பூசிகளின்போது முழுமையாக அவர்களை கரோனா பாதிப்பில் இருந்து காக்க முடியும். அவர்களின் சிகிச்சைகளுக்கு இடையூறு இல்லாமல் தடுப்பூசி செலுத்துவதை மட்டுமே உறுதி செய்தால் போதும் எனக் கூறினார்.

இதையும் படிங்க: வாஸ்குலர் இன்சுலின் எதிர்ப்பு - ஆண்கள் பெண்களை எவ்வாறு பாதிக்கிறது?

ABOUT THE AUTHOR

...view details