தமிழ்நாடு

tamil nadu

திருப்பதிக்கு ஸ்ரீ ஆண்டாள் சூடிக்களைந்த மாலை அனுப்பும் விழா

By

Published : Oct 9, 2021, 10:09 PM IST

வைக்கப்பட்டது.
வைக்கப்பட்டது. ()

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோயிலில் இருந்து சூடிக்களைந்த மாலை, கிளி, பரிவட்டம் உள்ளிட்டவை திருப்பதிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

விருதுநகர்: ஆந்திர மாநிலம் திருமலை திருப்பதியில் புரட்டாசி பிரம்மோற்சவ விழா கடந்த 2 நாள்களுக்கு முன்பு தொடங்கியது. வருடம்தோறும் இந்த பிரம்மோற்சவத்தின் போது ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் சூடிக்களைந்த மாலை, கிளி, பரிவட்டம் உள்ளிட்டவை திருப்பதி ஏழுமலையானுக்கு சாற்றப்படுவது வழக்கம்.

இந்நிலையில் இன்று (அக்.9) காலை ஸ்ரீ ஆண்டாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து ஸ்ரீ ஆண்டாள் கோயில் வளாகத்தில் பல வகையான மலர்களால் மாலை தயாரிக்கப்பட்டு ஸ்ரீ ஆண்டாளுக்கு சாற்றப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

திருப்பதிக்கு ஸ்ரீ ஆண்டாள் சூடிக்களைந்த மாலை அனுப்பும் விழா

பின்பு சூடிக்களைந்த மாலை, கிளி, பரிவட்டம் உள்ளிட்டவை திருப்பதிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இவைகள் பிரம்மோற்சவத்தின் ஐந்தாம் திருநாளன்று மோகினி அலங்காரத்தில் எழுந்தருளும் மலையப்ப சாமிக்கு சாற்றப்படும்.

இதையும் படிங்க:பாவேந்தர் பாரதிதாசனை கௌரவிக்க முதலமைச்சருக்கு கோரிக்கை!

ABOUT THE AUTHOR

...view details