தமிழ்நாடு

tamil nadu

கோயிலுக்குள் செல்ல அனுமதி மறுப்பு - வாக்குவாதம்

By

Published : Nov 24, 2021, 8:21 PM IST

ஆண்டாள் கோயிலுக்கு வந்த ம.பி., முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான்

ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயிலில் மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் சாமி தரிசனத்தின்போது பாஜகவினருக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

விருதுநகர்:மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தனது குடும்பத்தினருடன் தமிழ்நாட்டிற்கு நேற்று (நவ.23) மாலை வருகை தந்த நிலையில் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.

இன்று (நவ.24) காலை ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் சாமி தரிசனம் செய்வதற்காக பலத்த பாதுகாப்புடன் வந்தார்.

அவருக்கு கோயில் சார்பாக பூர்ண கும்ப மரியாதை வழங்கப்பட்டது. முன்னதாக ஸ்ரீ மணவாள மாமுனிகள் சன்னதியில் குடும்பத்தினருடன் தரிசனம் செய்தார்.

ஆண்டாள் கோயிலுக்கு வந்த ம.பி., முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான்

இந்நிலையில் மத்திய பிரதேச முதலமைச்சர் ஆண்டாள் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்கு செல்லும்போது அவருடன் செல்ல பாஜக நிர்வாகிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் பாஜகவினர், காவல் துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பின்னர், அவர்களை சமாதானப்படுத்திய காவல் துறையினர், அவர்களை அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.

இதையும் படிங்க:திருச்சி காவல் ஆய்வாளர் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் நிதி

ABOUT THE AUTHOR

...view details