தமிழ்நாடு

tamil nadu

விழுப்புரத்தில் பெரியார் சிலை முற்றிலுமாக இடிந்து சேதம்

By

Published : Jan 20, 2022, 10:57 AM IST

விழுப்புரத்தில் வடமாநிலத்து லாரி மோதி பெரியார் சிலை முற்றிலுமாக இடிந்து சேதம்

புதுச்சேரியிலிருந்து புனே சென்ற வடமாநிலத்து லாரி மோதி விழுப்புரம் காமராஜர் சாலையில் இருந்த பெரியார் சிலை முழுவதும் சேதமடைந்தது. லாரி ஓட்டுநரைக் கைதுசெய்து காவல் துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டுவருகின்றனர்.

விழுப்புரம்:காமராஜர் சாலையில் அமைந்துள்ள பெரியார் சிலை கன்டெய்னர் லாரி மோதியதில் முழுவதும் சேதமானது. இந்தச் சிலை கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பாக இந்தப் பகுதியில் நிறுவப்பட்டது.

புதுச்சேரியிலிருந்து புனே சென்ற வடமாநிலத்து கன்டெய்னர் லாரி ஓட்டுநர் வழிதெரியாமல் நகருக்குள் இருந்த சிலை மீது மோதியதால் முழுவதும் சேதம் ஆனதாக புனேவைச் சேர்ந்த மச்சிந்திர சபளி என்ற ஓட்டுநரை விழுப்புரம் நகர காவல் துறையினர் கைதுசெய்து கன்டெய்னர் லாரியைப் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

லாரி மோதி பெரியார் சிலை முற்றிலுமாக இடிந்து சேதம்

இந்நிலையில் இச்சம்பவத்தைக் கண்டித்து அதிகாலை திமுக கட்சியைச் சேர்ந்த சிலர் சாலை மறியல், காவல் துறை அலுவலக முகப்பு வாயில் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை அடுத்து சம்பவ இடத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் காவல் துறையினர் குவிக்கப்பட்டனர்.

விழுப்புரத்தில் வடமாநிலத்து லாரி மோதி பெரியார் சிலை முற்றிலுமாக இடிந்து சேதம்

மேலும், சிலையின் மீது கன்டெய்னர் லாரி மோதி சிலை முழுவதும் சேதமடையும் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. இதனையடுத்து, மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் உள்ளிட்ட ஏராளமான காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.

திமுகவினர் முற்றுகைப் போராட்டம்

இதையும் படிங்க : சும்மா குடும்ப சண்டைதான், விவாகரத்து அல்ல - கஸ்தூரி ராஜா விளக்கம்

ABOUT THE AUTHOR

...view details