தமிழ்நாடு

tamil nadu

கள்ளக்குறிச்சி மாணவியின் உடற்கூறாய்வு அறிக்கை - ஜிப்மர் மருத்துவக் குழுவிடம் ஒப்படைப்பு

By

Published : Aug 3, 2022, 12:06 PM IST

Etv Bharatஜிப்மர் மருத்துவக் குழுவிடம் கள்ளக்குறிச்சி மாணவியின் உடற்கூறாய்வு அறிக்கை ஒப்படைப்பு

கள்ளக்‍குறிச்சி தனியார் பள்ளி மாணவி மர்ம மரணம் தொடர்பான வழக்கில், உடற்கூராய்வு பரிசோதனை குறித்த அறிக்கையை புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை மருத்துவக்‍ குழுவினரிடம் சிபிசிஐடி போலீசார் ஒப்படைத்தனர்.

விழுப்புரம்:கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள கனியாமூர் தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்த மாணவி கடந்த மாதம் 13ம் தேதி, பள்ளி விடுதி வளாகத்தில் மர்மமான முறையில் உயிரிழந்தார். இதற்கு நீதி கேட்டு நடைபெற்ற போராட்டத்தில் கலவரம் வெடித்தது. இதையடுத்து கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மாணவியின் உடல் 2 முறை பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது.

இந்தப் பிரேத பரிசோதனையில், தங்களுக்கு நம்பிக்கை இல்லை என மாணவியின் பெற்றோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்தனர். இதனை தொடர்ந்து மாணவியின் இரண்டு பிரேத பரிசோதனை அறிக்கைகளையும் ஆய்வு செய்ய புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையைச் சேர்ந்த தடயவியல் துறை பேராசிரியர்களான திரு.குஷகுமார் சாஹா, சித்தார்த் தாஸ், அம்பிகா பிரசாத் பத்ரா உள்ளிட்ட 3 பேர் கொண்ட மருத்துவ நிபுணர் குழுவை உயர்நீதிமன்றம் அமைத்தது.

பிரேத பரிசோதனை தொடர்பான இரண்டு அறிக்கைகளையும் ஆய்வு செய்து ஒரு மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

அதனை தொடர்ந்து புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு நேற்று (ஆகஸ்ட் 2) சென்ற விழுப்புரம் சிபிசிஐடி போலீசார், சென்னை உயர்நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டுள்ள 3 மருத்துவ நிபுணர்கள் கொண்ட குழுவினரிடம் பிரேத பரிசோதனை அறிக்கைகளை ஒப்படைத்தனர். இதனை ஆய்வு செய்த பின்னர், விழுப்புரத்தில் உள்ள தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் குழுவினர் அறிக்கை தாக்‍கல் செய்ய உள்ளனர்.

இதையும் படிங்க:குற்றவாளிகளுக்கு பிணை வழங்கக்கூடாது - கள்ளக்குறிச்சி மாணவியின் தாயார்

ABOUT THE AUTHOR

...view details