தமிழ்நாடு

tamil nadu

'கந்துவட்டி' கும்பலுக்கு எஸ்.பி. எச்சரிக்கை

By

Published : Dec 26, 2019, 7:22 PM IST

Updated : Dec 26, 2019, 7:32 PM IST

கள்ளக்குறிச்சி: அரசு அங்கீகாரம் இல்லாத நிதி நிறுவனங்கள், கந்துவட்டி கும்பல் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்.பி. ஜெயச்சந்திரன் எச்சரிக்கைவிடுத்துள்ளார்.

kallakurichi-sp-press-meet
kallakurichi-sp-press-meet

கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார், அப்போது பேசிய அவர், ”கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அரசு அங்கீகாரம் இல்லாத நிதி நிறுவனங்கள், மாத சீட்டு நடத்துபவர்கள், தீபாவளி சீட்டு நடத்துபவர்கள், உரிமம் பெறாத சீட்டு நடத்தி கூடுதல் கந்துவட்டி வசூலிப்பவர்கள் ஆகியோர் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும்.

அங்கீகாரம் இல்லாத நிதி நிறுவனங்களில் பொதுமக்கள் பணத்தை செலுத்தி ஏமாற வேண்டாம். மூன்று நம்பர் லாட்டரி சீட்டு நடத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

கள்ளகுறிச்சி எஸ்பி செய்தியாளர் சந்திப்பு

மூன்று நம்பர் லாட்டரி சீட்டு விற்பதாக காவல் துறைக்கு தகவல் கிடைத்தால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை பாயும்" என்றார். மேலும் பொதுமக்கள் போலி நிறுவனங்களிடம் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம்” என்று கூறினார்.

இதையும் படிங்க:

உருட்டைக் கட்டையால் அடித்துக் காவலாளி கொலை!

Last Updated : Dec 26, 2019, 7:32 PM IST

ABOUT THE AUTHOR

...view details