தமிழ்நாடு

tamil nadu

பத்திரிகையாளர்களின் சமத்துவ பொங்கல் கொண்டாட்டம்

By

Published : Jan 14, 2020, 6:13 PM IST

விழுப்புரம் மாவட்ட பத்திரிகையாளர் நலச்சங்கம் சார்பில் விழுப்புரத்தில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

pongal
pongal

தமிழர்களின் திருநாளான பொங்கல் பண்டிகை நாளை (ஜன.15) முதல் கொண்டாடப்படவுள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பல்வேறு இடங்களில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளது.

இதனிடையே, விழுப்புரம் மாவட்ட பத்திரிகையாளர் நலச்சங்கம் சார்பில் மாவட்ட பெருந்திட்ட வளாகத்தில் உள்ள காவலர் பயிற்சி மைதானத்தில், சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

பத்திரிகையாளர் சங்க தலைவர் சீத்தாராமன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் மாவட்ட ஆட்சியர் ஆ.அண்ணாதுரை, காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் ஸ்ரேயா பி. சிங், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனுசாமி, நகராட்சி ஆணையர் தட்சிணாமூர்த்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

பத்திரிக்கையாளர்கள் கொண்டாடிய சமத்துவ பொங்கல்

தொடர்ந்து மல்லர்கம்பத்தில் சிறுவர்கள் செய்த சாகசத்தை அனைவரும் கண்டு மகிழ்ந்தனர். பின்னர் பத்திரிகையாளர் நலச்சங்கம் சார்பில் ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

முன்னதாக நிகழ்ச்சிக்கு வருகைபுரிந்த சிறப்பு விருந்தினர்களுக்கு கிராமிய இசை கலைஞர்கள் ஆடி, பாடி வரவேற்றனர்.

இதையும் படிங்க: ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் - களைகட்டிய சமத்துவ பொங்கல்

Intro:விழுப்புரம்: மாவட்ட பத்திரிக்கையாளர் நலச்சங்கம் சார்பில் விழுப்புரத்தில் இன்று சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.


Body:உலக தமிழர்களின் உன்னத பண்டிகையான பொங்கல் திருவிழா நாளை முதல் கொண்டாடப்படவுள்ளது.

இதையொட்டி அரசியல் கட்சிகள், பல்வேறு
அமைப்புகள், கல்லூரி மாணவர்கள் சார்பில் சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நிலையில் விழுப்புரம் மாவட்ட பத்திரிக்கையாளர் நலச்சங்கம் சார்பில் மாவட்ட பெருந்திட்ட வளாகத்தில் உள்ள காவலர் பயிற்சி மைதானத்தில் இன்று சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

பத்திரிக்கையாளர் சங்க தலைவர் சீத்தாராமன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் ஆ.அண்ணாதுரை, காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் ஸ்ரேயா பி. சிங், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனுசாமி மற்றும் நகராட்சி ஆணையர் தஷ்ணாமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

தொடர்ந்து மல்லர்கம்பத்தில் சிறுவர்கள் செய்த சாகசத்தை அனைவரும் கண்டு மகிழ்ந்தனர். பின்னர் பத்திரிக்கையாளர் நலச்சங்கம் சார்பில் ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

முன்னதாக நிகழ்ச்சிக்கு வருகை புரிந்த சிறப்பு விருந்தினர்கள் கிராமிய இசை கலைஞர்கள் ஆடி, பாடி வரவேற்றனர்.


Conclusion:இந்நிகழ்வில் மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி, பொருளாளர் சிவச்சந்திரன் மற்றும் அனைத்து பத்திரிக்கை நண்பர்கள் கலந்து கொண்டனர்.

ABOUT THE AUTHOR

...view details