தமிழ்நாடு

tamil nadu

விவசாய நிலத்தில் பாதாள சாக்கடை திட்டம் - 500க்கும் மேற்பட்டோர் போராட்டம்

By

Published : Sep 19, 2021, 9:56 PM IST

smart city project  smart city  people protest against smart city project  protest  people protest against smart city project in vellore  vellore news  vellore latest news  farmers protest  விவசாயிகள் போராட்டம்  பாதாள சாக்கடை திட்டம்  ஸ்மார்ட் சிட்டி  ஸ்மார்ட் சிட்டி திட்டம்  ஸ்மார்ட் சிட்டி திட்டம் எதிர்த்து போராட்டம்  பாதாள சாக்கடை திட்டம் எதிர்த்து போராட்டம்

காட்பாடியில் சீர்மிகு நகர திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டு வரும் மாநகராட்சி பாதாள சாக்கடை திட்டம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வேலூர்: காட்பாடி காங்கேயநல்லூர் பகுதியில் வேலூர் சீர்மிகு நகர திட்டத்தின் கீழ் சுமார் 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கழிவுநீர் சுத்திகரிப்பு பம்பிங் சிஸ்டம் அமைப்பதற்கான முதற்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

இப்பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதியைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இன்று (செப் 19) போராட்டத்தில் ஈடுபட்டனர்.

500க்கும் மேற்பட்டோர் போராட்டம்...

வேறு இடத்திற்கு மாற்றக்கோரி போராட்டம்

மேலும் இத்திட்டம் குறித்து பொதுமக்கள் கூறுகையில், “விவசாய பொருட்களை உலர்த்தி காய வைக்கப் பயன்படும் நிலத்தில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட உள்ளது.

சுத்திகரிப்பு நிலையத்தை சுற்றி காங்கேயநல்லூர், திருவள்ளுவர் நகர், வெள்ளக்கல்மேடு, குமரன் நகர் ஆகிய நான்கு கிராமங்களில் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இதன் அருகிலேயே மழலையர் பள்ளி அமைந்துள்ளது.

சீர்மிகு நகர திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டு வரும் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் அருகிலேயே கிருபானந்த வாரியாரின் நினைவு மண்டபம் இருக்கிறது. இப்போது, அமைக்கப்பட்டு வரும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தினை மக்கள் குடியிருப்பு இல்லாத வேறு இடத்திற்கு மாற்றக்கோரி போராட்டம் நடக்கிறது.

இவ்விடத்தில் கடந்த ஆட்சி காலத்தில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று திட்டத்தினை கைவிட்ட நிலையில், ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் அரசு அதிகாரிகளால் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன” என்றனர்.

இதையும் படிங்க: அரசுப் பள்ளி சுற்றுச் சுவர் இடிந்து விபத்து - வெளியான பரபரப்பு சிசிடிவி

ABOUT THE AUTHOR

...view details