தமிழ்நாடு

tamil nadu

உணர்ச்சிபொங்க பேசிக்கொண்டிருந்தபோது திடீரென துண்டிக்கப்பட்ட மின்சாரம் - அமைச்சர் துரைமுருகனுக்கே இந்த கதி!

By

Published : Sep 12, 2022, 10:17 PM IST

Updated : Sep 12, 2022, 10:53 PM IST

உணர்ச்சி பொங்க பேசிக்கொண்டிருந்த போது திடீரென மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் அப்சட்- அமைச்சர் துரைமுருகன்

தான் படித்த பள்ளியில் மலரும் நினைவுகளுடன் பேசிக் கொண்டிருந்த நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மின்சாரம் நிறுத்தப்பட்டதால் பாதியிலேயே சென்றதால் பொதுமக்களிடையே பரபரப்பு நிலவியது.

வேலூர்:காட்பாடி மகளிர் மேல்நிலைப்பள்ளியில் இன்று அரசின் இலவச மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது. இதில் காட்பாடி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும் மாநில நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் கலந்து கொண்டு பேசிக் கொண்டிருக்கும்போது திடீரென மின்சாரம் துண்டிக்கப்பட்டது. 15 நிமிடங்களுக்குமேல் நேரம் ஆகியும் மின்சாரம் வராததால் பாதியில் பேச்சை நிறுத்திய அமைச்சர் துரைமுருகன், அவசர அவசரமாக மாணவர்களுக்கு மிதிவண்டியை வழங்கிவிட்டு விரைந்து சென்றுவிட்டார்.

நிகழ்ச்சி நடைபெற்ற பள்ளியானது அன்றைய கால கட்டத்தில் சுமார் 70 ஆண்டுகளுக்கு முன் துரைமுருகன் படித்த பள்ளி என்பதால், மலரும் நினைவுகளை அவர் பேசிக்கொண்டிருந்தபோது மின்சாரம் துண்டிக்கப்பட்டது. சிறிது நேரம் மின்சாரம் வரும் என எதிர்பார்த்து நின்று கொண்டிருந்த அமைச்சர் மின்சாரம் வராததால் அருகே இருந்த நாற்காலியில் அமர்ந்து கொண்டார்.

பின்னர் மின்சாரம் கொடுக்கும்படி மாவட்ட ஆட்சியர் குமரவேல் பாண்டியன் 2 முறை மின்வாரிய அலுவலகத்திற்கு போன் செய்த பிறகும் மின்சாரம் கொடுக்காததால் அருகே இருந்த அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் ஏபி.நந்தகுமார், ’கொடுங்க நான் பேசுகிறேன்’ என்று வாங்கிப் பேசினார், அப்போதும் மின்சாரம் வராததால் கடுப்பான பின்னர் அமைச்சர் மாணவர்களுக்கு சைக்கிள் கொடுத்து விட்டு இறங்கி சென்று விட்டார்.

உணர்ச்சிபொங்க பேசிக்கொண்டிருந்தபோது திடீரென துண்டிக்கப்பட்ட மின்சாரம் - அமைச்சர் துரைமுருகனுக்கே இந்த கதி!

தான் படித்த பள்ளியில் மலரும் நினைவுகளுடன் பேசிக் கொண்டிருந்த அமைச்சர் பாதியிலேயே சென்றதால் பொதுமக்களிடையே அணில் தன் வேலையைக் காட்டி விட்டதோ என பரபரப்பு ஏற்பட்டுவிட்டது. அமைச்சர் துரைமுருகன் விழா முடிந்து சென்ற பிறகு, அங்கு போடப்படிருந்த இருக்கைகளை அதே மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவிகள் எடுத்து வைத்து அடுக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

இதையும் படிங்க:தமிழ்நாட்டில் 30 அரசு செவிலியர் கல்லூரிகள் தொடங்க ஒன்றிய அரசு நிதி வழங்க வேண்டும் - அமைச்சர் கோரிக்கை

Last Updated :Sep 12, 2022, 10:53 PM IST

ABOUT THE AUTHOR

...view details