தமிழ்நாடு

tamil nadu

அஜித்திடம் அமைச்சர் துரைமுருகன் மன்னிப்பு கோர வேண்டுமா? அர்ஜூன் சம்பத் பரபரப்பு பேட்டி

By

Published : Aug 17, 2023, 5:02 PM IST

நடிகர் அஜித் குமாரிடம் அமைச்சர் துரைமுருகன் மன்னிப்பு கேட்க வேண்டும் திமுகவினர் அஜித் குமார் மீது வன்மத்துடன் உள்ளனர் என திருச்சியில் அர்ஜுன் சம்பத் பேட்டியளித்துள்ளார்.

நடிகர் அஜித் குமாரிடம் அமைச்சர் துரைமுருகன் மன்னிப்பு கேட்க வேண்டும்   அர்ஜூன் சம்பத்  பேட்டி
நடிகர் அஜித் குமாரிடம் அமைச்சர் துரைமுருகன் மன்னிப்பு கேட்க வேண்டும் அர்ஜூன் சம்பத் பேட்டி

நடிகர் அஜித் குமாரிடம் அமைச்சர் துரைமுருகன் மன்னிப்பு கேட்க வேண்டும் அர்ஜூன் சம்பத் பேட்டி

திருச்சி:ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் ராஜ கோபுரம் முன் இருந்த பெரியார் சிலை அகற்றப்பட்டது தொடர்பான வழக்கில் ஆஜராவதற்காக, இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் திருச்சி வந்தார். அப்போது, தனியார் விடுதியில் ஒன்றில் செய்தியாளரர்களை சந்தித்த அர்ஜுன் சம்பத் கூறியதாவது:

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் ராஜ கோபுரம் முன் பெரியார் சிலை வைத்தது சட்டவிரோதம். தி.மு.க. ஆட்சிக்கு வரும் போதெல்லாம், ஆட்சி அதிகாரத்தை, அரசு இயந்திரத்தை, அரசு பணத்தை பயன்படுத்தி, கட்சி அடையாளங்களையும், சிலைகளையும் வைக்கின்றனர்.கல்வி தொழில் வேலை வாய்ப்பு திட்டங்கள், விவசாய தொழில், சேமிப்பு குடோன் வைப்பதற்கு நிதி பற்றாக்குறை என்று கூறும் அரசு, கருணாநிதி பெயரில் கட்டடம் கட்ட உள்ளது. திராவிட அடையாளங்களை, கொள்கைகளை திணிப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.

அரசு இடங்களில் ஆக்கிரமித்து வைத்துள்ள பெரியார் கருணாநிதி அன்பழகன் போன்றவர்களின் சிலைகளை அகற்ற வேண்டும்.மணிப்பூர் கலவரத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தும் இஸ்லாமிய அமைப்பினர், பாரத மாதா மற்றும் ராமர் சீதை ஆகியோரை அவமதிக்கும் வகையில் பதாகைகள் வைத்துள்ளனர். இதற்கு ஆட்சேபனை தெரிவித்ததும், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா வருத்தம் தெரிவித்தார்.

ஆனால், கம்யூனிஸ்ட் மற்றும் வேறு சில இஸ்லாமிய அமைப்புகள் அது போன்ற அவமதிப்புகள் தொடர்ந்து நடைபெறுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக போராட்டம் நடத்தபோலீசார் அனுமதி மறுக்கின்றனர். நீட் தேர்வு விவகாரத்தில், வரும் 20‌ ஆம்‌தேதி, உதயநிதி உண்ணாவிரதம் இருப்பது, மக்களை ஏமாற்றும் மிகப் பெரிய நாடகம். தமிழகத்தில், நீட் தேர்வு எதிர்ப்பின் மூலம், மாணவர்களின் தன்னம்பிக்கையை கெடுத்து, தற்கொலைக்கு துாண்டும் உள் நோக்கத்தில், உதயநிதி போராட்டம் நடத்துகிறார். அதே நாளில், மாணவர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் பிரச்சாரம் செய்யப்படும் என்றும்.

நீட் தேர்வு விவகாரத்தில், தற்கொலை செய்த மாணவியின் தந்தை, எப்போது நீட் தேர்வை ரத்து செய்வீர்கள் என்று கேட்டவரையும் தற்கொலை செய்ய வைத்துள்ளனர். கருணாநிதியை மேடையில் வைத்துக் கொண்டே, திரைப்பட துறையினருக்கு நெருக்கடி கொடுக்கிறீர்கள், என்று சொன்ன நடிகர் அஜீத்குமார் மீது, தி.மு.க.,வினருக்கு கோபம் இருக்கிறது. அதனால், அவரை பற்றி சமூக வலைதலங்களில் அவதுாறு பரப்புகின்றனர். அவரை பற்றி தவறாக பேசிய அமைச்சர் துரைமுருகன் மன்னிப்பு கேட்க வேண்டும்.

தி.மு.க., கம்யூனிஸ்ட்கள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், தேர்தலுக்கு முன், ஜாதி, மத அடிப்படையில் கலவரத்தை துாண்டி விட முயற்சிக்கின்றனர். நாங்குநேரி சம்பவத்தை மூடி மறைப்பதற்காக, உதயநிதி உண்ணாவிரதம் இருக்கிறார். மாரிசெல்வராஜ், கம்யூனிஸ்ட் சிந்தனை உள்ள சந்துரு போன்றவர்கள் ஜாதி கலவரத்தை துாண்டுபவர்களுக்கு உடந்தையாக இருகின்றனர். மாணவர்களிடம் ஜாதி, மத உணர்வுகளை மங்கச் செய்வதற்காக அமைக்கப்பட்ட குழுவில், இருப்பவர்கள் ஜாதி வெறியை துாண்டுபவர்களாக இருப்பதால், அந்த குழுவை கலைக்க வேண்டும்.

எந்த பிரச்னையாக இருந்தாலும், அதற்கு ஒரு குழுவை அமைப்பதை மட்டுமே முதல்வர் செய்கிறார். தேசிய தலைவர்களை கூட, ஜாதி தலைவர்களாக மற்றும் நிலை உள்ளது. இதை தடுக்க, மத்திய அரசு கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.இறை நம்பிக்கை உள்ள வள்ளலாரை அவமதிக்கும் வகையிலும், அவரது சிந்தனைகளை மடை மாற்றம் செய்யும் வகையிலும் கிறிஸ்தவ மிஷனரி மற்றும் திராவிடர் கழகத்தினர் பிரச்சாரத்தில் ஈடுபடுகின்றனர். உயர்ந்த நோக்கத்தில் கூறப்பட்ட சொற்களை, ஜாதியை சுட்டி இழிவுபடுத்தியதாக கூறி, பிரித்தாளும் சூழ்ச்சி செய்கின்றனர். தேசிய தலைவர்களை அவமதிக்கும் செயல்களையும், செய்து கொண்டே இருக்கின்றனர். தி.மு.க.,வினரின் சொல் ஒன்றாவும் செயல் வேறாகவும் உள்ளது.
இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க :"பல்வேறு துறைகளில் உள்ள அனைத்து காலிப் பணியிடங்களையும் நிரப்புக" - ஓபிஎஸ் வலியுறுத்தல்!

ABOUT THE AUTHOR

...view details