தமிழ்நாடு

tamil nadu

'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தின் கீழ் எதையும் செய்யவில்லை - தமிழக அரசு மீது அண்ணாமலை குற்றச்சாட்டு!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 2, 2024, 10:59 AM IST

K.Annamalai: 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தின் கீழ் தமிழக அரசு எந்தவித திட்டத்தையும் செயல்படுத்தவில்லை என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.

Bjp state president Annamalai alleged TN Government
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் தமிழக அரசு எந்தவித திட்டத்தையும் செயல்படுத்தவில்லை என அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்

அண்ணாமலை செய்தியாளர் சந்திப்பு

திருச்சி:திருச்சி விமான நிலையத்தின் புதிய முனையம் திறப்பு விழா மற்றும் பாரதிதாசன் பல்கலைக்கழகம் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று (ஜன.2) திருச்சி வருகை தருகிறார். பிரதமர் மோடியை வரவேற்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்று வரவேற்க உள்ளனர்.

பிரதமர் மோடியின் வருகையையொட்டி பாஜகவினர் திருச்சியில் முகாமிட்டுள்ளனர். இதன் ஒரு‌ பகுதியாக, காந்தி மார்க்கெட் பகுதியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் (Swachh Bharat Mission) தூய்மைப்பணிகளை மேற்கொண்டார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது பேசிய அவர், “பிரதமருக்குப் பிடித்த 'தூய்மை இந்தியா' திட்டத்தை திருச்சிக்கு பிரதமர் வரும் நேரத்தில் இன்றைய நாளில் 75 இடங்களில் பாஜகவை சேர்ந்த அமைச்சர்கள், தலைவர்கள், இளைஞர் அணி தலைவர் உள்ளிட்டோர் தூய்மைப்பணியில் ஈடுபட்டுள்ளோம்.

தமிழகத்தில் குப்பைகள் அதிகளவு சேர்ந்து வருகிறது. தமிழ்நாடு அரசு குப்பைகளை அகற்றி மீண்டும் உரமாக மாற்றி பல்வேறு விதமான திட்டங்களை செயல்படுத்த முன்வர வேண்டும். அதிகமான குப்பை கிடங்குகள் தான் உருவாகிக் கொண்டிருக்கிறது. மேலும், குப்பைகளை அகற்றாமல் சாலையில் துர்நாற்றம் வீசும் அளவுக்கு உள்ளது. பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த இந்த சுத்தம் செய்யும் பணியில் பாஜகவினர் ஈடுபட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

பிரதமர் இன்று திருச்சிக்கு வரும்போது, முக்கிய தலைவர்கள் அவருக்கு வரவேற்பு அளிக்கின்றனர். அதேபோல் முன்னாள் முதல்வர் என்ற அடிப்படையில் ஓ.பன்னீர்செல்வம் வரவேற்பு அளிக்க இருப்பது தெரியவந்தது. பிரதமரை வரவேற்க முக்கிய தலைவர்கள் விரும்பினால், அவர்கள் வரவேற்க அனுமதிக்கப்படுவார்கள்.

மிக முக்கியமாக இரண்டு பெரு வெள்ளங்கள் வந்தும் தமிழக அரசு 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தின் கீழ் எந்தவித திட்டங்களையும் செயல்படுத்தவில்லை. மிகப்பெரிய அளவில் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பெருமழை பெய்யும் என முன்னெச்சரிக்கை கொடுத்தும் தமிழ்நாடு அரசு எந்தவித முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காமல் ஜீரோ சதவீதம் பணியில் ஈடுபடாமல் இருந்தார்கள்.

இது தமிழ்நாடு அரசின் கையாளாகாத தனத்தை காட்டுகிறது என காட்டமான பதிலை தெரிவித்தார். இன்று திருச்சியில் இரண்டாவது புதிய முனையத்தை பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார். மிக முக்கியமாக பெரிய விமானங்கள் இனி திருச்சி விமான நிலையத்திற்கு வரும். மேலும், அதிக அளவில் விமான போக்குவரத்து பல்வேறு நாடுகளுக்கு இதன் மூலம் இயங்கும்” என அவர் மேலும் பேசினார்.

இதையும் படிங்க: ஒரே மேடையில் மோடி, ஸ்டாலின், ஆர்.என்.ரவி! - திருச்சியில் பாதுகாப்பு தீவிரம்

ABOUT THE AUTHOR

...view details