தமிழ்நாடு

tamil nadu

மரத்தில் சிக்கிய ஆட்டோ! குழப்பத்தில் மக்கள்!

By

Published : May 28, 2022, 5:53 PM IST

மரத்தில் சிக்கிய ஆட்டோ! குழப்பத்தில் மக்கள்!

நீண்ட ஆண்டுகளாக மரத்தில் சிக்கிக் கொண்டிருக்கும் ஆட்டோ எப்படி எடுப்பது என்று தெரியாமல் குழப்பத்தில் பொதுமக்கள் இருந்து வருகின்றனர்.

திருப்பூர்மாநகராட்சிக்கு உட்பட்ட ராயபுரம் பகுதியில் உள்ள மாநகராட்சி பூங்காவில் சுமார் 30 ஆண்டுகளாக ஆலமரம் ஒன்று இருக்கிறது. அந்த ஆலமரத்தில் ஆட்டோ ஒன்று சிக்கி புதைந்த நிலையில் உள்ளது. ஆட்டோவின் முன்பகுதி மரத்தின் கிளைகளிலும் பின்பகுதி மரத்தின் மையப் பகுதியிலும் புதைந்த நிலையில் உள்ளது.

ஆலமரம் சிறிதாக இருக்கும் பொழுதே அதனருகில் கைவிடப்பட்ட நிலையில் இருந்த ஆட்டோ மரம் வளர வளர மரத்தின் பாகங்கள் ஆட்டோவை சுற்றி வளைத்து உள்ளதாகவும் இதனால் தற்பொழுது ஆட்டோவின் பாகங்கள் மரத்தில் புதைந்து சிக்கி உள்ளதாக பொதுமக்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

தற்பொழுது அந்த ஆட்டோவை அகற்ற முற்பட்டால் ஆலமரம் பாதிக்கப்படும் எனவே அந்த ஆட்டோவை எவ்வாறு வெளியில் எடுப்பது என்று தெரியாமல் குழப்பம் நிலவி வருவதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். இந்நிலையில் ஆலமரத்திற்கு இடையில் சிக்கிக் கொண்டுள்ள இந்த ஆட்டோவை பொதுமக்கள் பலரும் அவர்களது செல்போன்களில் படம் எடுத்து செல்கின்றனர்.

இதையும் படிங்க :விளாங்குறிச்சி கிராமம் அல்ல.. இனி அது ‘டாஸ்மாக் கிராமம்’ - கோயம்புத்தூர் அதிமுக எம்.எல்.ஏக்கள் கோரிக்கை!

ABOUT THE AUTHOR

...view details