தமிழ்நாடு

tamil nadu

Tirupattur Floods: வீடுகளில் புகுந்த வெள்ளநீர்; கண்டுகொள்ளாத அரசு - சாலை மறியலில் ஈடுபட்ட மக்கள்

By

Published : Nov 21, 2021, 7:52 PM IST

people,road,stroke

வீடுகளில் புகுந்த வெள்ள நீரை அகற்ற யாரும் முன்வராததால் பாதிக்கப்பட்ட மக்கள் , வாணியம்பாடி நியூடவுன் பகுதியில் சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் (Chennai - Bengaluru) சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பத்தூர் மாவட்டம்:திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த 3 நாட்களாகப் பெய்த கனமழை காரணமாக நீர்நிலைகள் நிரம்பி, அதன் உபரி நீர் வெளியேறி வருகிறது.

வெளியேறும் உபரிநீர், ஆக்கிரமிப்பால் வெளியேற முடியாமல் வாணியம்பாடியின் திருவள்ளுவர் நகர், தர்ஜிப் பேட்டை உள்ளிட்ட ஐந்திற்கும் மேற்பட்டப் பகுதிகளில் புகுந்துள்ளது.
வெள்ள நீரால் கடந்த 3 நாட்களாக, அப்பகுதி மக்கள் சாப்பிட முடியாமலும், தூங்க முடியாமலும் அவதிப்பட்டு வருகின்றனர்.

இதனைப்பார்க்க அலுவலர்கள் யாரும் வராததாலும், வெள்ள நீரை வெளியேற்ற நடவடிக்கை மேற்கொள்ளாததாலும் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மறியல் காரணமாக இரு சாலைகளில் சுமார் நான்கு கிலோமீட்டர் தூரம் வாகனங்கள் வரிசை கட்டி நின்றன. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த நகர காவல் துறையினர் மற்றும் நகராட்சி ஊழியர்கள் விரைந்து சென்று ஜேசிபி இயந்திரம் மூலம் வெள்ள நீரை வெளியேற்றும்பணியில் பணியில் ஈடுபட்டனர்.

இதனைத்தொடர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இதனால் சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதையும் படிங்க: விசாரணை படத்தை விட ஜெய் பீம் பிரமாதமானதல்ல- கார்த்தி சிதம்பரம்

ABOUT THE AUTHOR

...view details