தமிழ்நாடு

tamil nadu

ஆம்பூர் பிரியாணி விழா சர்ச்சை - திருப்பத்தூர் ஆட்சியருக்கு பட்டியல் மற்றும் பழங்குடியினர் ஆணையம் நோட்டீஸ்

By

Published : May 12, 2022, 10:23 PM IST

பிரியாணி

ஆம்பூர் பிரியாணி திருவிழாவில் மாட்டிறைச்சி இடம் பெறாதது குறித்து விளக்கம் அளிக்க திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியருக்கு தமிழ்நாடு மாநிலப் பட்டியல் மற்றும் பழங்குடியினர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் பிரியாணி திருவிழா வரும் 13,14,15 ஆகிய தேதிகளில் நடைபெற இருந்த நிலையில் கனமழை காரணமாக விழா தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வா அறிவித்தார். இதனிடையே விழாவில் மாட்டிறைச்சி இடம் பெறாதது குறித்து விளக்கம் அளிக்க மாநிலப்பட்டியல் மற்றும் பழங்குடியினர் ஆணையம் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

பிரியாணி
அதில் மாட்டிறைச்சி தவிர்ப்பு மூலம் அங்குள்ள இரண்டு லட்சத்துக்கும் அதிகமான எஸ்.சி.,எஸ்.டி., மக்கள் மற்றும் இஸ்லாமியர்களுக்கு எதிரான தீண்டாமை கடைப்பிடிக்கப்படுகிறதா என விசாரணை மேற்கொள்ள முடிவு செய்துள்ளதாகவும், இதனை ஏன் சமூக அடிப்படையிலான பிரிவினையாக எடுத்துக்கொள்ளக்கூடாது என விளக்குமாறும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிரியாணி

இதையும் படிங்க: ஆம்பூர் பிரியாணி திருவிழாவில் பீப்-க்கு தடை; கவலை வேண்டாம்: விசிக இலவசமாக வழங்க முடிவு

ABOUT THE AUTHOR

...view details