தமிழ்நாடு

tamil nadu

பள்ளி மாணவியைக் கடத்தி திருமணம்: இளைஞர் மீது பாய்ந்த போக்சோ

By

Published : Nov 12, 2021, 2:55 PM IST

வாணியம்பாடி அருகே 12ஆம் வகுப்புப் படிக்கும் மாணவியை ஏமாற்றி கடத்திச் சென்று திருமணம் செய்துகொண்ட இளைஞர் போக்சோ சட்டத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

வாணியம்பாடி அருகே 14 வயது பள்ளி மாணவியை ஏமாற்றி கடத்தி சென்று திருமணம் செய்த இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது

திருப்பத்தூர்: வாணியம்பாடியை அடுத்த ஆவாரங்குப்பம் பள்ளத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் வாசு (22). இவர் அப்பகுதியில் பிரியாணி கடையில் வேலை பார்த்துவந்துள்ளார். இந்த நிலையில் வாசு அப்பகுதியைச் சேர்ந்த 12ஆம் வகுப்புப் படித்துவரும் மாணவியை கடந்த ஓராண்டாகக் காதலித்துவந்துள்ளார்.

இதனை அறிந்த அக்கடையின் உரிமையாளர் வாசுவை வேலையை விட்டு நிறுத்தியுள்ளார். பின்னர் வாசு கோவையில் ஒரு கடையில் வேலை பார்த்துவந்துள்ளார். வெளி மாவட்டத்திற்குச் சென்ற பின்னர் அந்த மாணவியை ஏமாற்றி கடந்த மாதம் 15ஆம் தேதி கடத்திச் சென்று திருமணம் செய்துகொண்டார்.

இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது

போக்சோ சட்டத்தில் கைது

மாணவியின் பெற்றோர் மாணவியை பல இடங்களில் தேடியும் கிடைக்காத காரணத்தினால் கடந்த மாதம் 16ஆம் தேதி அம்பலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதனையடுத்து காவல் துறையினர் மாணவியைத் தேடியபொழுது வாசு பற்றிய தகவல் அறிந்து கோவையில் வாசுவை கைதுசெய்து மாணவியைப் பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

பின்னர் வாசுவை போக்சோ சட்டத்தின்கீழ் கைதுசெய்த காவல் துறையினர் அவரைச் சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க:சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை - தனியார் பள்ளி தாளாளர் போக்சோ சட்டத்தில் கைது

ABOUT THE AUTHOR

...view details