தமிழ்நாடு

tamil nadu

சேப்பாக்கத்தில் யாரும் மஞ்சள் கலர் ஜெர்சி போடாதீங்க - நடிகர் சதீஷ் பேட்டி!

By

Published : Jul 3, 2023, 3:22 PM IST

'சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்தியா-ஆஸ்திரேலியாவுக்கு இடையிலான போட்டி நடைபெற உள்ளது. இதுவரை நாம் மஞ்சள் கலர் ஜெர்சிக்கு ஆதரவு அளித்தோம். ஆனால், இனி நாம் ப்ளூ கலர் ஜெர்சிக்கு ஆதரவளிக்க உள்ளோம்' என்று நடிகர் சதீஷ் தெரிவித்துள்ளார்.

actor sathish
நடிகர் சதீஷ்

தூத்துக்குடி: தமிழ்நாடு பிரிமியர் கிரிக்கெட் லீக் போட்டிகள் நடைபெறுவதை முன்னிட்டு தூத்துக்குடியில் கோவை லைகா கிங்ஸ் அணியின் செயல் தலைவர் சிவக்குமரன் ஏற்பாட்டின் பேரில், தூத்துக்குடி தனியார் பள்ளியில் மதுரை மற்றும் கோவை லைக்கா கிங்ஸ் அணிகளுக்கிடையேயான போட்டியை கோவை லைக்கா கிங்ஸ் ரசிகர்கள் பார்ப்பதற்கான பேன் பார்க் முதல் முறையாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதில், கோவை லைக்கா கிங்ஸ் அணியின் விளம்பர தூதரும், நடிகருமான சதீஷ் கலந்து கொண்டு கோவை லைக்கா கிங்ஸ் ரசிகர்களுடன் அமர்ந்து பெரிய திரையில் போட்டியை கண்டு களித்து உற்சாகப்படுத்தினார். இந்த போட்டியில் கோவை லைக்கா கிங்ஸ் அணி வெற்றி பெற்றது. இதை ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடினர். இதில் ஏராளமான கோவை லைக்கா கிங்ஸ் ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.

பின்னர் நடிகர் சதீஷ் செய்தியாளர்களிடம் கூறுகையில், ’ஐபிஎல் கிரிக்கெட்டுக்கு பின்பு தமிழ்நாடு பிரிமியர் கிரிகெட் லீக் துவங்கப்பட்டு தற்போது அதிக அளவு பார்வையாளர்களை கவர்ந்துள்ளது. இதன் மூலம் இந்திய அணிக்கு சிறந்த வீரர்கள் உருவாக்கப்பட்டு தேர்வாகின்றனர்.

இதையும் படிங்க:Ashes test: பென் ஸ்டோக்ஸ் போராட்டம் வீண்; இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி!

மேலும், 2011ல் உலக கோப்பை இந்தியாவில் நடைபெற்றது, அதில் நாம் வெற்றி பெற்றோம். அதே போல் இந்த ஆண்டும் நடைபெற உள்ளது அதிலும் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது. அதுமட்டுமில்லாமல் சென்னை சேப்பாக்கத்தில் இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் முதல் போட்டி நடைபெற உள்ளது.

சேப்பாக்கம் மைதானத்தில் போட்டி என்றாலே இதுவரை மஞ்சள் கலர் ஜெர்சியில் கலந்து கொண்டு ஆதரவளித்து பழகி விட்டோம். ஆனால் தற்போது மஞ்சள் கலர் ஜெர்சியில் ஆஸ்திரேலியா அணி விளையாட உள்ளது. நாம் ப்ளூ கலர் ஜெர்சிக்கு ஆதரவளிக்க உள்ளோம்’ என்று கூறியனார்.

மேலும் அவர், ’மாமன்னன் திரைப்படம் பெரிய அளவில் வெற்றியைக் கண்டுள்ளது. உதயநிதி ஸ்டாலின் சிறப்பாக நடித்துள்ளார். இதேபோன்று வடிவேலுவும் நன்றாக நடித்துள்ளார். ஏற்கனவே தேவர் மகன், எம்டன் மகன் உள்ளிட்ட படங்களில் தனது குணச்சித்திர நடிப்பை வடிவேலு வெளிப்படுத்தியுள்ளார். அதேபோன்று மாமன்னன் படத்திலும் அவர் சிறப்பாக நடித்துள்ளது பாராட்டுக்குரியது’ என்றார்.

இதையும் படிங்க: டெல்லியில் பிரதமரின் வீடு மீது ஆளில்லா விமானம் பறந்தது - விசாரணையை துவக்கியது போலீஸ்!

ABOUT THE AUTHOR

...view details