தமிழ்நாடு

tamil nadu

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழில் சதம் அடித்த மாணவி!

By

Published : Jun 20, 2022, 4:16 PM IST

பத்தாம் வகுப்பு பொதுதேர்வில் தமிழில் சதம் அடித்த மாணவி
பத்தாம் வகுப்பு பொதுதேர்வில் தமிழில் சதம் அடித்த மாணவி

தமிழ்மொழி படிப்பதற்கு எளிமையாக இருப்பதாக பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் மாநிலத்தில் தமிழில் சதம் அடித்து முதல் மதிப்பெண் பெற்ற மாணவி துர்கா தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி: தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்புகளுக்கான தேர்வு முடிவுகள் இன்று (ஜூன் 20) வெளியானது. இந்நிலையில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் திருச்செந்தூர் அருகே உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்த மாணவி துர்கா பத்தாம் வகுப்பு தேர்வில் 500-க்கு 448 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.

இதில் தமிழ்ப்பாடத்தில் 100 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் தமிழ்ப்பாடத்தில் முதல் மதிப்பெண் பெற்றுள்ளார். மாணவியின் தந்தை ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றி வருகிறார். மாணவியை பள்ளி ஆசிரியர்கள், குடும்பத்தினர் பாராட்டினர். பின்னர் மாணவிக்கு பள்ளி முதன்மை முதல்வர் செல்வ வைஷ்ணவி பரிசு கோப்பை வழங்கினார்.

இதுபற்றி மாணவி துர்கா கூறுகையில், 'தமிழில் முதல் மதிப்பெண் பெறுவதற்கு ஆசிரியர்கள், குடும்பத்தினர் உடன் படித்த நண்பர்கள் அனைவரும் ஊக்கப்படுத்தினர். மேலும் தமிழ்மொழி படிப்பதற்கு எளிமையாக இருந்தது' என்றார்.

மாணவி துர்கா மற்றும் ஆசிரியர் பேட்டி

ஆங்கில வழிக் கல்வியில் பயின்ற மாணவி தமிழ்ப்பாடத்தில் சதம் அடித்து முதல் இடம் பெற்றிருப்பது தனிச்சிறப்பை பெற்றுள்ளது.

இதையும் படிங்க:10ஆம் வகுப்பு தேர்வு முடிவில் முதலிடத்திற்கு முன்னேறிய குமரி மாவட்டம்!

ABOUT THE AUTHOR

...view details