தமிழ்நாடு

tamil nadu

ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு- 6 மாத காலத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய வலியுறுத்தல்

By

Published : Aug 23, 2021, 10:15 PM IST

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக விசாரணை நடத்தி ஆறு மாத காலத்திற்குள் முழு அறிக்கையையும் அரசிடம் தாக்கல் செய்யவேண்டும் என மனித உரிமை ஆர்வலரும், வழக்கறிஞருமான ஹென்றி திபேன் வலியுறுத்தியுள்ளார்.

sterlite-shooting-hendry-urging-to-file-report-within-6-months
ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு- 6 மாதகாலத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய வலியுறுத்தல்

தூத்துக்குடி:தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தியதில், 13 பேர் உயிரிழந்தனர். இதுதொடர்பாக நீதி விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க தமிழ்நாடு அரசு, ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் ஆணையம் அமைத்து உத்தரவிட்டது.

இந்த ஆணையம், சென்னை, தூத்துக்குடியில் உள்ள முகாம் அலுவலகங்களில் கலவரத்தில் தொடர்புடையவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறது. ஒரு நபர் ஆணையத்தின் 29ஆவது கட்ட விசாரணை இன்று(ஆகஸ்ட் 23) காலை தொடங்கியது. கலவரத்தின்போது காயம்பட்ட காவலர்கள், கலவரத்தில் காயம் பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்க மருத்துவர்கள், வழக்கறிஞர் ஹென்றி திபேன் உள்ளிட்ட 58 பேருக்கு நேரில் ஆஜராகி விளக்கம் அளிப்பதற்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.

ஹென்றி திபென் ஆஜர்

அதன்படி, இன்று வழக்கறிஞர் ஹென்றி திபென் ஆணையம் முன்பு ஆஜரானார். முன்னதாக செய்தியாளர்களைச் சந்தித்த அவர், " கடந்தாண்டு ஜனவரி மாதம் ஒரு நபர் ஆணையத்தின் முன்பு ஆஜராகி எழுத்துப்பூர்வமாக வாதங்களை முன்வைத்தேன். இதனைத்தொடர்ந்து குறுக்கு விசாரணைக்காக இன்று ஒரு நபர் ஆணையம் முன்பு ஆஜராக உள்ளேன். மூன்று ஆண்டுகளாகியும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கவில்லை.

6 மாதகாலத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய வலியுறுத்தல்

விசாரணை விரைந்து முடிக்கப்படவேண்டும் என்பது தூத்துக்குடி மக்களின் எதிர்பார்ப்பு. துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக இன்னமும் மாவட்ட ஆட்சியர், அன்றைய தினத்தில் இருந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் துப்பாக்கிச் சூட்டுக்கு உத்தரவு அளித்ததாகக் கூறப்படும் தாசில்தார் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தப்படவில்லை" என்றார்.

விசாரணையை விரைந்து முடிக்க வலியுறுத்தல்

மேலும், "மாதத்திற்கு ஐந்து நாள் மட்டுமே இந்த அமர்வு செயல்படுவது வருத்தமளிக்கிறது.கரோனா காலத்தில், சாட்சிகள் ஒரு அறையிலும், அலுவலர்கள் ஒரு அறையிலும் அமர்ந்து விசாரணையை நடத்தி முடித்திருக்கலாம். அதற்கு வழி இல்லையெனில் ஆன்லைன் மூலமாக மெய்நிகர் விசாரணைக் கூட்டம் நடத்தி விசாரணையை மேற்கொண்டிருக்கலாம்.

விசாரணையை விரைந்து முடிக்கவேண்டும்- ஹென்றி திபேன்

ஆணையத்தின் தாமத பணிகள் மீது ஆதங்கம் உள்ளது. அரசு கூறியுள்ளபடி 6 மாத காலத்திற்குள் முழு விசாரணை நடத்தி துப்பாக்கிச்சூடு கலவரம் தொடர்பான முழு அறிக்கையையும் தமிழிலும், ஆங்கிலத்திலும் அரசுக்கு தரவேண்டும் என்பதே எனது விருப்பம். துப்பாக்கிச்சூடு நடத்திய காவலர்களில் குறைந்தபட்சம் சிலராவது இந்நேரம் சிறைக்குசென்று இருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு நடக்காதது ஆணையத்தின் தாமதத்தை காட்டுகிறது. எனவே, விசாரணையை விரைந்து முடிக்க வேண்டும்" என்றார்.

இதையும் படிங்க:ஸ்டெர்லைட் ஆலைக் கழிவுகளை அகற்றக்கோரிய வழக்கு - தமிழ்நாடு அரசு பதிலளிக்க உத்தரவு

ABOUT THE AUTHOR

...view details