தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள எம்.எம். வித்யாஷ்ரம் பள்ளியில் தமிழர்களின் பாரம்பரிய பொங்கல் விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. இந்த நவீன காலத்தில் அனைவரும் கூட்டுக் குடும்பமாக வாழ வேண்டும் என்பதை வலியுறுத்தும்விதமாக பள்ளி மாணவர்கள், பெரியவர்கள் போன்று வேடமணிந்து பொங்கல் விழாவில் கலந்துகொண்டனர்.
தொடர்ந்து மாவிலைத் தோரணம், மங்கலப் பொருள்களுடன் மங்கள வாத்தியம் இசைக்க பொங்கலோ பொங்கல் என்ற முழக்கத்துடன் மாணவர்கள் பொங்கலிட்டு மகிழ்ந்தனர். மேலும், பாரம்பரிய விளையாட்டான சிலம்பம், பல்லாங்குழி, பம்பரம், தாயம் உறியடித்தல் என பல்வேறு போட்டிகள் நடைபெற்றன.