ETV Bharat / state

பொங்கல் விளைச்சல் அமோகம்... ஆனால் விலை இல்லையே? வருத்தத்தில் விவசாயிகள்!

author img

By

Published : Jan 10, 2020, 9:14 AM IST

நாகப்பட்டினம்: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கரும்பு விளைச்சல் அதிகரித்துள்ள போதிலும், விற்பனை சூடுபிடிக்காததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

pongal sugarcane harvest is good in nagai, sugarcane rate is very low in market, பொங்கல் விளைச்சல் அமோகம், கரும்புக்கு விலை இல்லை, கரும்பு விவசாயிகள் கவலை
கருப்பு விவசாயம்

நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி அருகே காத்திருப்பு, அல்லிவிளாகம், ராதாநல்லூர், செம்பதனிருப்பு, ஆலங்காடு, சாவடி உள்ளிட்ட இடங்களில் சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் பொங்கல் பண்டிகைக்காக செங்கரும்பு பயிரிடப்பட்டுள்ளது. சுமார் 10 மாத கால பயிரான இந்த கரும்பு ஏப்ரல், மே மாதங்களில் நடவு செய்யப்பட்டு ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் அறுவடைக்கு தயாராகின்றது.

ஏக்கர் ஒன்றுக்கு கரும்பு நடவு செய்வது, தோகை உரிப்பது, உரமிடுவது, பராமரிப்பது என்று ஒரு லட்சம் ரூபாய் முதல் ஒன்றரை லட்சம் ரூபாய் வரையில் செலவாகிறது. 2019ஆம் ஆண்டு செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் பெய்த மழை காரணமாக, கரும்பு பயிர்கள் பாதிக்கப்பட்டு அவற்றை மீண்டும் உரங்களிட்டு கூடுதல் செலவுடன் பயிர்கள் பாதுகாக்கப்பட்டன.

கரும்பு விலை சரிவு: வேதனையில் விவசாயிகள்

தற்போது நல்ல விளைச்சலுடன் செங்கரும்பு வளர்ந்து அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது. பொங்கலுக்கு இன்னும் நான்கு நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், வயல்களில் கரும்புகளை வாங்கி விற்பனைக்கு எடுத்துச்செல்லும் வியாபாரிகள் ஆர்வம் காட்டாத காரணத்தால், கரும்பு விற்பனை இன்னும் சூடுபிடிக்கவில்லை.

கரும்பு உற்பத்தியில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை அடைய நடவடிக்கை; தோப்பு வெங்கடாச்சலம்

இதன் காரணமாக கரும்பு விலை வீழ்ச்சி ஏற்பட்டு விவசாயிகளுக்கு இழப்பு ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. விவசாயிகளிடம் கரும்பை அரசு கொள்முதல் செய்தால் தங்களுக்கு லாபம் கிடைக்கும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கருப்பு விவசாயம்
Intro:பொங்கல்கரும்பு விளைச்சல் அதிகரித்துள்ள போதிலும், விற்பனை சூடுபிடிக்காததால் விவசாயிகள் வேதனை.Body:பொங்கல்கரும்பு விளைச்சல் அதிகரித்துள்ள போதிலும், விற்பனை சூடுபிடிக்காததால் விவசாயிகள் வேதனை.


நாகை மாவட்டம் சீர்காழி அருகே காத்திருப்பு, அல்லிவிளாகம், இராதாநல்லூர், செம்பதனிருப்பு, ஆலங்காடு, சாவடி , உள்ளிட்ட இடங்களில் சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் பொங்கலுக்கு என்று செங்கரும்பு பயிரிடப்பட்டுள்ளது. சுமார் 10 மாத கால பயிரான இந்த கரும்பு ஏப்ரல், மே மாதங்களில் நடவு செய்யப்பட்டு ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் அறுவடைக்கு தயாராகின்றது. ஏக்கர் ஒன்றுக்கு கரும்பு நடவு செய்வது, தோகை உரிப்பது, உரமிடுவது, பராமரிப்பது என்று சுமார் ரூ. ஒருலட்சம் முதல் ஒன்றரை லட்சம் ரூபாய் வரையில் செலவு ஏற்படுகின்றது. இந்த ஆண்டு கடந்த செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் பெய்த மழை காரணமாக, கரும்பு பயிர்கள் பாதிக்கப்பட்டு அதனை மீண்டும் உரங்களிட்டு கூடுதல் செலவுடன் பயிர் பாதுகாக்கப்பட்டது. தற்போது நல்ல விளைச்சலுடன் செங்கரும்பு வளர்ந்து அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது. பொங்கலுக்கு இன்னும் 4 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், வயல்களில் கரும்புகளை வாங்கி விற்பனைக்கு எடுத்துச்செல்லும் வியாபாரிகள் விற்பனையில் ஆர்வம் காட்டாத காரணத்தால், கரும்பு விற்பனை இன்னும் சூடுபிடிக்கவில்லை. இதன் காரணமாக கரும்பு விலை வீழ்ச்சி ஏற்பட்டு விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. விவசாயிகளிடம் கரும்பை அரசு கொள்முதல் செய்தால் தங்களுக்கு லாபம் கிடைக்கும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.