தமிழ்நாடு

tamil nadu

வீரபாண்டிய கட்டபொம்மன் சிலைக்கு மாலை அணிவித்து வீரசக்கதேவியை பயபக்தியுடன் கும்பிட்ட கலெக்டர்!

By

Published : May 13, 2022, 7:57 PM IST

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் வீரபாண்டிய கட்டபொம்மன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

ஓட்டப்பிடாரம் அருகே பாஞ்சாலங்குறிச்சி வீரசக்கதேவி ஆலய விழாவை முன்னிட்டு அரசு சார்பில் கட்டபொம்மன் சிலைக்கு தூத்துக்குடி ஆட்சியர் செந்தில்ராஜ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தூத்துக்குடி:ஓட்டப்பிடாரம் அருகே பாஞ்சாலங்குறிச்சி ஸ்ரீ வீரசக்கதேவி ஆலய 66ஆவது ஆண்டு திருவிழா இன்று 13.05.2022 மற்றும் 14.05.2022 ஆகிய 2 நாட்கள் நடைபெறுகிறது. இதையடுத்து இன்று அரசு சார்பில் பாஞ்சாலங்குறிச்சி வீரபாண்டிய கட்டபொம்மன் கோட்டை வளாகத்தில் உள்ள கட்டபொம்மனின் முழு உருவச்சிலைக்கு, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் டாக்டர் செந்தில்ராஜ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன், சுதந்திரப்போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மனின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதையடுத்து வீரசக்கதேவி ஆலயத்தில் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் ஆகியோர் சாமி தரிசனம் செய்தனர்.

வீரபாண்டிய கட்டபொம்மன் சிலைக்கு மாலை அணிவித்து வீரசக்கதேவியை பயபக்தியுடன் கும்பிட்ட கலெக்டர்!
இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான், கோவில்பட்டி கோட்டாட்சியர் சங்கரநாராயணன், வட்டாட்சியர் நிஷாந்தினி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும் தற்பொழுது 144 தடை உத்தரவு அமலில் உள்ளதை அடுத்து சுமார் 1500 போலீசார் அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: தூத்துக்குடியில் படகு மூழ்கியதால் நடுக்கடலில் தத்தளித்த மீனவர்கள்

ABOUT THE AUTHOR

...view details