தமிழ்நாடு

tamil nadu

திருவண்ணாமலை கிரிவலப் பாதையை 24 மணி நேரமும் கண்காணிக்க 5 ரோந்து வாகனங்கள்

By

Published : Aug 23, 2022, 10:53 AM IST

திருவண்ணாமலை கிரிவலம் செல்லும் பக்தர்களின் பாதுகாப்பு வசதிக்கு 5 ரோந்து வாகனங்களை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மரு.கார்த்திகேயன் தொடங்கி வைத்தார்.

திருவண்ணாமலை கிரிவலப் பாதையை 24 மணி நேரமும் கண்காணிக்க 5 ரோந்து வாகனங்கள்
திருவண்ணாமலை கிரிவலப் பாதையை 24 மணி நேரமும் கண்காணிக்க 5 ரோந்து வாகனங்கள்

திருவண்ணாமலையில் உள்ள மலையையே பக்தர்கள் சிவனாக வழிபட்டு வருகின்றனர். இதனால், பக்தர்கள், 14 கி.மீ துாரமுள்ள மலையை, வலம் வந்து வழிபடுகின்றனர். இதில், தற்போது, பவுர்ணமி நாட்கள் மட்டுமல்லாமல், மற்ற நாட்களிலும், கிரிவலம் செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

பக்தர்கள் பாதுகாப்பாக கிரிவலம் செல்ல, கிரிவலப்பாதையில் உள்ள, கலைஞர் கருணாநிதி அரசு கலைக்கல்லுாரி முதல், அறிஞர் அண்ணா நுழைவு வாயில் வரை, 10 கி.மீ துாரத்திற்கு, 24 மணி நேரமும் காவல் துறையினர் ரோந்து சென்றிட ஐந்து பைக்குகளை, மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் மரு.கார்த்திகேயன் தொடங்கி வைத்தார்.

திருவண்ணாமலை கிரிவலப் பாதையை 24 மணி நேரமும் கண்காணிக்க 5 ரோந்து வாகனங்கள்

இந்த பைக்கில், சைரன் மற்றும் வாக்கி டாக்கியும் பொருத்தப்பட்டுள்ளது. கிரிவலப் பாதையில் சந்தேகப்படும் படியான நபர்கள் சுற்றி திரிந்தால், ரோந்து பணியில் ஈடுபடும் போலீசார் அவரது மொபைல்போனில் படம் எடுத்து, எப்.ஆர்.எஸ். என்ற மொபைல் ஆப் மூலம் பரிசோதித்தால், அவர்கள் ஏற்கனவே, குற்ற வழக்கில் ஈடுபட்டுள்ளனரா என்ற விவரம் தெரிய வரும்.

ரோந்து பணியில் ஈடுபடும் போலீஸார், 8 மணி நேரம் என்ற வகையில், ஒரு நாளைக்கு மூன்று ஷிப்ட் என்ற முறையில் பணியில் ஈடுபடுவார்கள் என்று மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மரு.கார்த்திகேயன் தெரிவித்தார்.

இதையும் படிங்க: விநாயகர் சதுர்த்தியினை முன்னிட்டு ஆரணியில் விநாயகர் சிலை தயாரிப்புப்பணிகள் தீவிரம்

ABOUT THE AUTHOR

...view details