தமிழ்நாடு

tamil nadu

ஜவ்வாது மலையில் வெளுத்து வாங்கிய மழை - சிற்றாறுகளில் வெள்ளப்பெருக்கு!

By

Published : Aug 5, 2022, 10:07 AM IST

ஜவ்வாது மலையில் வெளுத்து வாங்கிய மழை - சிற்றாறுகளில் வெள்ளப்பெருக்கு!

திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மழையில் வெளுத்து வாங்கிய மழையால், பீமன் உள்ளிட்ட பல்வேறு நீர்வீழ்ச்சி மற்றும் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

திருவண்ணாமலை : கடந்த இரு தினங்களாக திருவண்ணாமலை, ஆரணி, செய்யாறு, வந்தவாசி, செங்கம், ஜவ்வாதுமலை, கலசப்பாக்கம் பகுதிகளில் பரவலாக கனமழை பெய்து வந்தது. இந்நிலையில் நேற்று காலை முதல் பல்வேறு பகுதிகளில் விட்டுவிட்டு கனமழை பெய்தது.

இதனால் மாவட்டம் முழுவதும் உள்ள ஏரி, குளம், குட்டை உள்ளிட்ட நீர்நிலைகளில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இம்மாவட்டத்தில் உள்ள முக்கிய அணைகளான சாத்தனூர், குப்பநத்தம், மிருகண்டா, செண்பகத்தோப்பு உள்ளிட்ட நான்கு அணைகளும் நிரம்பும் நிலையில் உள்ளது.

இதனிடையே ஜவ்வாது மலையில் கொட்டித் தீர்த்த கனமழையின் காரணமாக, அங்குள்ள பீமன் நீர்வீழ்ச்சி மற்றும் பல்வேறு சிற்றாறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. முக்கியமாக ஜவ்வாது மலை, மேல்பட்டு, நம்மியம்பட்டு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

ஜவ்வாது மலையில் வெளுத்து வாங்கிய மழை - சிற்றாறுகளில் வெள்ளப்பெருக்கு!

நம்மியம்பட்டு அமிர்தி சாலை, போளூர் ஜமுனாமரத்தூர் சாலை ஆகிய இரு சாலைகளிலும் காட்டாற்று வெள்ளத்தால் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது. இதன் ஒரு பகுதியாக மலைவாழ் மக்கள் ஒரு சிலர் இருசக்கர வாகனங்களில் ஊர்ந்து சென்றனர். மேலும் மலைவாழ் மக்கள், போளூர் மற்றும் அமிர்தி ஆகிய பகுதிகளில் இருந்து சொந்த ஊரான ஜமுனாமரத்தூர் திரும்ப முடியாமல் அவதிப்பட்டனர்.

அமிர்தி பகுதியில் உள்ள போறை ஆற்றில் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தில், அமிர்திலிருந்து நம்மியம்பட்டுச் சென்ற பள்ளி மாணவனின் இருசக்கர வாகனம் காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது.

இதையும் படிங்க:முல்லைப் பெரியாறு கரையோர மக்களுக்கு முதல் வெள்ள அபாய எச்சரிக்கை!!

ABOUT THE AUTHOR

...view details