தமிழ்நாடு

tamil nadu

சாலை மறியலில் ஈடுபட்ட 150 அரசு ஊழியர்கள் கைது

By

Published : Feb 4, 2021, 10:15 PM IST

திருவண்ணாமலை: 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மூன்றாவது நாளாக சாலை மறியலில் ஈடுபட்ட தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தினர் 150 பேரை காவல்துறையினர் கைதுசெய்தனர்.

government-staffs
அரசு ஊழியர்கள்

திருவண்ணாமலை தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மூன்றாவது நாளாக அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து, அண்ணா சிலையில் இருந்து பெரியார் சிலை வரை பேரணியாக வந்து பெரியார் சிலை நான்குமுனை சந்திப்பில் சாலை மறியலில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்ட 150க்கும் மேற்பட்டோரை காவல்துறையினரைக் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்துள்ளனர்.

13 அம்ச கோரிக்கைகளில் சில..

  • தமிழ்நாடு அரசு புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
  • சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள், வருவாய் கிராம உதவியாளர்கள், நூலகர்கள் உள்ளிட்ட தொகுப்பூதியம், சிறப்பு காலமுறை ஊதியம் பெறும் பணியாளர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும்
  • அவுட்சோர்சிங் மற்றும் ஆள்குறைப்பு நடவடிக்கைகளை அரசு கைவிட வேண்டும்
    கைதான அரசு ஊழியர்கள்

இது தொடர்பாக பேசிய அரசு ஊழியர்கள், ’தமிழ்நாடு முதலமைச்சர் எங்களை அழைத்து பேசும் வரை தொடர் மறியல் மற்றும் சிறை நிரப்பும் போராட்டத்தில் ஈடுபடுவோம்’ என்றனர்.

இதையும் படிங்க:தொடரும் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் போராட்டம் : என்ன தீர்வு?

ABOUT THE AUTHOR

...view details