தமிழ்நாடு

tamil nadu

தென்பெண்ணை கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

By

Published : Aug 6, 2022, 4:03 PM IST

வெள்ளம்
வெள்ளம் ()

திருவண்ணாமலையில் சாத்தனூர் அணையில் இருந்து நீர் திறக்கப்பட உள்ள நிலையில், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை:கனமழை காரணமாக 119 அடி கொள்ளளவு கொண்ட சாத்தனூர் அணையில் தற்போது, 115 கன அடி நீர் நிரம்பியுள்ளது. மேலும், தொடர்மழை காரணமாக விநாடிக்கு 7850 கன அடி கன நீர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது.

பொதுமக்களுக்கு எச்சரிக்கை:இதனால், அணையின் பாதுகாப்பு கருதி, தென்பெண்ணை ஆற்றில் 3,000 கன அடி நீர் மேலும் சாத்தனூர் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகமாக உள்ளதால், அணையின் பாதுகாப்பு கருதி எந்நேரம் வேண்டுமானாலும் அணை திறக்கப்படலாம் என கரையோர மக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் இன்று (ஆக.6) எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தென்பெண்ணை ஆறு

இதனைத் தொடர்ந்து, தென்பெண்ணை ஆறு ஓடும் மாவட்டங்களான விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய மாவட்ட கரையோர மக்களுக்கு ஆற்றில் யாரும் குளிக்கக் கூடாது, துணி துவைக்கக் கூடாது, யாரும் ஆற்றைக் கடக்க கூடாது என ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு - முன்னெச்சரிக்கை பணிகள் தீவிரம்!

ABOUT THE AUTHOR

...view details