தமிழ்நாடு

tamil nadu

அதிமுக, பாஜக கூட்டணியில் நீடிக்குமா என்பதை பாஜக மத்திய தலைமை முடிவு செய்யும் - சுதாகர் ரெட்டி

By

Published : Mar 21, 2023, 11:13 PM IST

அதிமுக, பாஜகவின் கூட்டணியில் உள்ளதா என்பது குறித்து மத்திய தலைமை கூட்டணி உறுதியான முடிவை இறுதியில் எடுக்கும் என பாஜக தேசிய இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி தெரிவித்தார்.

Etv Bharat
Etv Bharat

அதிமுக பாஜக கூட்டணியில் நீடிக்குமா என்பதை பாஜக மத்திய தலைமை முடிவு செய்யும் - சுதாகர் ரெட்டி

திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாஜகவின் சார்பில் வலிமையான பூத்திற்க்கான பொறுப்பாளர்கள், மாவட்ட நிர்வாகிகள், மண்டல் தலைவர்கள், மண்டலுக்கான சக்தி கேந்திர பொறுப்பாளர்கள், அணி பிரிவின் மாவட்ட தலைவர்களுக்கான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இதில் 300க்கும் மேற்பட்ட பாஜக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த ஆய்வுக் கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக பாஜக தேசிய இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி கலந்து கொண்டு பூத் கமிட்டி உறுப்பினர்களை ஆய்வு செய்தார்.

முன்னதாக திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலில் பிரதமர் மோடியின் நல்லாட்சி தொடரவும், நாட்டு மக்கள் நலமுடன் வாழ வேண்டும் என்பதற்காகவும் 1008 சங்காபிஷேக பூஜை தேசிய இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி ஏற்பாட்டில் நடத்தப்பட்டது.

பின்னர் பாஜக தேசிய இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசியதாவது, ”திருவண்ணாமலை தெற்கு மாவட்டம் பாஜக நிர்வாகிகள் கட்சி சார்பில் வலிமையான பூத் அமைப்பது குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்த கட்சி நிர்வாகிகளிடையே நடைபெற்ற இந்த ஆய்வுக் கூட்டம் திருப்திகரமாக அமைந்திருந்தது.

இலவச கேஸ், முத்ரா வங்கிக் கடன் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் மூலம் தமிழ்நாட்டில் ஏராளமான பயனாளிகள் மத்திய அரசு திட்டங்களால் பலன் அடைந்துள்ளனர். மத்திய அரசின் சாதனைகளை பொது மக்களிடம் எடுத்துரைக்க வேண்டிய பணிகளும் நடைபெற்று வருகிறது. அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் நிலையற்ற பொருளாதார தன்மை உள்ள நிலையில் பாரத பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இந்தியா மிகச் சிறந்த ஸ்திரமான பொருளாதார வளர்ச்சியை எட்டியுள்ளது.

தமிழ்நாட்டில் திராவிட மாடல் ஆட்சி நடைபெறுவதாக முதலமைச்சர் கூறுகிறார். ஆனால், மந்திரி ஒருவர் பெண்களை கொச்சைப்படுத்தும் விதமாக ஓசி பஸ் பயணம் என்று பேசுகிறார். திமுக கட்சியில் உள்ள நபர்கள் கட்டப் பஞ்சாயத்து உள்ளிட்ட சமூக விரோதச்செயல்களில் ஈடுபட்டு தவறான முறையில் பேசி வருகின்றனர்.

திமுகவினர் குடும்பத்தை முதன்மையாக கருதி பொதுமக்களின் நலன்களை, பின்னுக்குத் தள்ளி ஆட்சியை நடத்தி வருகிறார்கள். காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் குடும்பம் ஆளும் கட்சிகளாக உள்ளது. பாரதிய ஜனதா கட்சி பொறுத்தவரை நாடு தான் முக்கியம் என்று செயல்பட்டு வருகிறது.

பெரும்பான்மையான பொது மக்களின் நலனுக்கு ஏற்ப நிதின் கட்கரி டோல்கேட்கள் குறித்து தெரிவித்த கருத்துகள் குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும். இந்திய வரலாற்றில் எப்போதும் இல்லாத வகையில் 9.5 கோடி இலவச கேஸ் சிலிண்டர் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. அதிமுக, பாஜகவின் கூட்டணியில் உள்ளதா என்பது குறித்து கட்சியின் மத்திய தலைமை கூட்டணி உறுதியான முடிவை இறுதியில் எடுக்கும்’’ என சுதாகர் ரெட்டி தெரிவித்தார்.

நீதிமன்றத்தின் தீர்ப்பு மற்றும் சட்டத்தின் அடிப்படையிலேயே அண்ணாமலையார் கோயில் அம்மணி அம்மன் மடம் மற்றும் ஆக்கிரமிப்புகள் குறித்த நடவடிக்கைகள் இருக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு நாங்கள் வேண்டுகோள் வைக்கிறோம் சுதாகர் ரெட்டி தெரிவித்தார்.

இதையும் படிங்க: அண்ணாமலையார் கோவில் பங்குனி மாதம் பிரதோஷம்.. ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்

ABOUT THE AUTHOR

...view details