தமிழ்நாடு

tamil nadu

கூட்டம் கூடினால் அலாரம் அடிக்கும் - தகுந்த இடைவெளியை கடைப்பிடிக்க ஐரிஸ் கருவி!

By

Published : Jul 8, 2020, 8:33 AM IST

iris
iris

திருவள்ளூர்: திருமழிசை காய்கறி சந்தையில் தகுந்த இடைவெளியை கடைப்பிடிக்க ஐரிஸ் என்ற புதிய கருவியினை திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தொடங்கி வைத்தார்.

திருவள்ளூர் மாவட்டத்தில் இதுவரை கரோனா பாதிப்பாளர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 21ஆக உயர்ந்துள்ளது. மின்னல் வேகத்தில் பரவும் கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. சென்னை கோயம்பேடு சந்தையில் மக்கள் அதிகமாக கூடியதன் விளைவாக கரோனா தொற்று சமூக பரவலாக மாறியது.

இதனைத்தொடர்ந்து, கோயம்பேட்டில் செயல்பட்டு வந்த காய்கறி சந்தை திருமழிசை துணைக் கோள் நகரத்திற்கு மாற்றப்பட்டது. இதனையொட்டி அங்கு வரும் வியாபாரிகள் தகுந்த இடைவெளியை கடைப்பிடிக்கும் திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் முயற்சியில் 'ஐரிஸ்' என்ற கருவி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த கருவி பொது இடங்கள் மற்றும் அத்தியாவசிய கடைகளில் பொதுமக்களிடையே இரண்டரை அடி இடைவெளியை கடைப்பிடிக்க உதவியாக இருக்கிறது.

இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கூறியதாவது, "கரோனா பரவலை தடுக்க மிக முக்கியமாக பின்பற்ற வேண்டியது தகுந்த இடைவெளி. இதனை கருத்தில்கொண்டு தான் இந்தக் கருவியை பிரத்யேகமாக தனியார் நிறுவனத்துடன் இணைந்து வடிவமைத்துள்ளோம். தமிழ்நாட்டில் முதல் முறையாக திருமழிசை காய்கறி சந்தையில் அதிகமாக கூட்டம் கூடும் கடைகளில் இதனை பொறுத்தியுள்ளோம்.

25 மீட்டர் வரை கண்காணிக்கும் இந்த ஐரிஸ் கருவி இரண்டரை மீட்டர் இடைவெளி இல்லையென்றால் அதனை நினைவூட்ட ஆலாரம் அடிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது" என்றார்.

இதையும் படிங்க:சித்த மருத்துவத்துற்கு ஏன் தனியாக எவ்வித நிதியும் ஒதுக்கவில்லை ? - உயர் நீதிமன்றம் கேள்வி!

ABOUT THE AUTHOR

...view details