தமிழ்நாடு

tamil nadu

’பட்ஜெட்டில் விவசாயிகளின் கடனை நிபந்தனையின்றி தள்ளுபடி செய்ய வேண்டும்’

By

Published : Feb 13, 2020, 4:33 PM IST

திருவாரூர்: தமிழ்நாடு பட்ஜெட்டில் விவசாயிகளுக்கான கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று பி.ஆர். பாண்டியன் கோரிக்கை விடுத்துள்ளார்.

pandian
pandian

தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கத்தின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர். பாண்டியன் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”நாளை தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் விவசாயிகள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 2012 முதல் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் வாங்கிய கடனை திரும்பச் செலுத்த முடியாமல் தவித்து வருகின்றனர். கூட்டுறவு வங்கிகளின் மூலம் வழங்கப்பட்ட கடன் தள்ளுபடி செய்யப்படாததால், விவசாயிகள் கடன் பெற முடியாத நிலை உள்ளது.

விவசாயிகளின் கடனை நிபந்தனையின்றி தள்ளுபடி செய்ய வேண்டும். காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்த தமிழ்நாடு முதலமைச்சர் சட்டப்பேரவையில் உடனடியாக அவசரச் சட்டம் கொண்டுவந்து, குடியரசுத் தலைவருக்கு அனுப்பி ஒப்புதல் பெற வேண்டும்.

பி.ஆர். பாண்டியன், விவசாயிகள் சங்கத்தின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர்

குடிமராமத்துப் பணிகளுக்கு நிதி ஒதுக்கி அப்பணிகள் குறிப்பிட்ட காலத்திற்குள் முடிவடைய நடவடிக்கை எடுக்க வேண்டும். திருவாரூர் மாவட்டத்தில் வேளாண் கல்லூரி அமைப்பதற்கு, இந்த சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் அறிவிப்பு வெளியிட வேண்டும். இந்த பட்ஜெட் விவசாயிகளை பாதுகாக்கும் பட்ஜெட்டாக அமைய வேண்டும்” என்றார்.

இதையும் படிங்க: 'சூரிய மின்விளக்குப் பொறி பூச்சிகளை அழித்துவிடுகிறது' - விவசாயிகள் மகிழ்ச்சி

ABOUT THE AUTHOR

...view details