ETV Bharat / state

'சூரிய மின்விளக்குப் பொறி பூச்சிகளை அழித்துவிடுகிறது' - விவசாயிகள் மகிழ்ச்சி

author img

By

Published : Feb 13, 2020, 8:09 AM IST

அரியலூர்: விவாசாய நிலங்களில் அழிவை ஏற்படுத்தும் பூச்சிகளை சூரிய மின்விளக்குப் பொறி முற்றிலுமாக அழித்துவிடுவது தங்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

farmers-are-happy-to-control-the-suns-lamp-trap
farmers-are-happy-to-control-the-suns-lamp-trap

அரியலூர் மாவட்டத்தில் நெல் பயிரிடும் விவசாயிகளுக்குப் பூச்சிகளைக் கட்டுப்படுத்த அட்மா திட்டத்தின் கீழ் 4 ஆயிரம் ரூபாய் மானியத்தில் சூரிய மின் விளக்கு பொறி வழங்கப்பட்டிருக்கிறது.

இதனை விவசாயிகள் தங்களுடைய சாகுபடி நிலங்களில் வைக்கும்பொழுது, இந்தப் பொறி மூலம் நெல்லுக்குத் தீமை செய்யும் பூச்சிகளை எளிதாக அழித்துவிட முடிவதாலும் மேலும் பூச்சிமருந்து தெளிக்கும் செலவு விவசாயிகளுக்குக் குறைந்துள்ளதாலும் விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

சூரிய மின்விளக்குப் பொறி பூச்சிகளைக் கட்டுப்படுத்துவதாக விவசாயிகள் மகிழ்ச்சி

இந்நிலையில் தாமரைக்குளம் கிராமத்தில் ரெங்கராஜ் என்ற விவசாயியின் நிலத்தை மாவட்ட ஆட்சியர் ரத்னா நேரில் சென்று ஆய்வுசெய்தார். மேலும் அரியலூர் மாவட்டத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்பட போதுமான சூரிய மின் பொறி வைக்கப்பட்டுள்ளதாகவும் அதனை விவசாயிகள் வாங்கி பயனடைய வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதையும் படிங்க:நாய்களுக்குத் திருமணம் செய்து வைத்த பாரத் சேனா!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.