தமிழ்நாடு

tamil nadu

ஆசிரியர்களுக்கு பாத பூஜை செய்த மாணவர்கள்

By

Published : Sep 8, 2021, 6:19 AM IST

d

திருவள்ளூரில் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவர்கள், தங்களது ஆசிரியர்களுக்கு பாத பூஜை செய்தனர்.

திருவள்ளூர்: காக்களூர் ஊராட்சியில் அமைந்துள்ள தனியார் பள்ளியில் வஉசி குறித்த கருத்தரங்கம் மற்றும் ஆசிரியர் தின நிகழ்ச்சி ரோட்டரி கிளப் ஆப் திருவள்ளூர் பிரைட் சங்கத்தின் தலைவர் ஆர்யா சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது.

பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வஉசி குறித்த கருத்தரங்கில் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் கலந்துகொண்டு அவரது வாழ்க்கை வரலாறு , சுதந்திரப் போராட்டத்திற்கான பங்கு குறித்து தனது கருத்துக்களை எடுத்துரைத்தனர்.

ஆசிரியர்களுக்கு பாத பூஜை

பின்னர் நடைபெற்ற ஆசிரியர் தின விழாவில் காக்களூர் சின்னி ஸ்ரீராமுலு செட்டி விவேகானந்தா வித்யாலயா பள்ளியில் பணிபுரியும் 14 ஆசிரியர்களுக்கு பள்ளி மாணவர்கள் பாதபூஜை செய்தனர்.

அப்போது பழம், பூ, மஞ்சள், குங்குமம் உள்ளிட்டவற்றை கொண்டு ஆசிரியர்களை நாற்காலியில் அமரவைத்து மாணவர்கள் ஆசிரியர்களின் பாதங்களை சுத்தம் செய்து மஞ்சள் குங்குமம் இட்டு பாதபூஜை செய்து அவர்களுக்கு தாம்பூலத் தட்டு கொடுத்தனர்.

அதனைப் பெற்றுக் கொண்ட ஆசிரியர்கள் பாதபூஜை செய்த மாணவர்களை நீடூடி வாழ்க எல்லா வளமும் பெற்று பெருவாழ்வு வாழ வேண்டும் நன்றாக படித்து உலகத்திற்கு உதாரணமாக வாழ வேண்டும் என மலர்தூவி ஆசீர்வாதம் செய்தனர்.

ஆசிரியர்களுக்கு பாத பூஜை

நெகிழ்ச்சி சம்பவம்

இந்நிகழ்வு அங்கு கூடியிருந்த மாணவர்கள், ரோட்டரி சங்க நிர்வாகிகள் இடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் காக்களூர் ஊராட்சி மன்ற தலைவர் சுபத்ரா ராஜ்குமார், சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு ஆசிரியர்களுக்கு ரோட்டரி கிளப் ஆஃப் திருவள்ளூர் பிரைட் சங்கத்தின் நற்சான்றிதழ்களை ஆசிரியர்களுக்கு வழங்கினார்.

பின்னர் பள்ளியில் படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் பாதபூஜை செய்த மாணவர்களுக்கும் சிறப்பு சான்றிதழை வழங்கப்பட்டது.

இதையும் படிங்க: மயிலாடுதுறை மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரியும் ஐந்து ஆசிரியர்களுக்கு விருது

ABOUT THE AUTHOR

...view details