தமிழ்நாடு

tamil nadu

ஏழை மக்களுக்கு செல்டர் டிரஸ்ட் உதவி!

By

Published : Nov 23, 2021, 11:01 PM IST

()

திருவள்ளூரில் ஏழை மக்களுககு செல்டர் டிரஸ்ட் தரப்பில் உதவி செய்யப்பட்டது.

திருவள்ளூர்:சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் அடிப்படை வசதியின்றி வாழ்வாதாரம் இல்லாமல் அவதிப்படும் பல்லாயிரம் குடும்பங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருள்கள், கல்வி, மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு உதவிகளை சென்னை செல்டர் டிரஸ்ட் நிறுவனம் செய்துவருகிறது

அதன் ஒரு பகுதியாக திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாக பெய்த கனமழையின் காரணமாக பாதிக்கப்பட்டு வாழ்வாதாரத்தை இழந்த ஏழை எளிய மக்களுக்கு உதவிட திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் வருவாய்த் துறையின் வழிகாட்டுதலின் பேரில், பூண்டி ஒன்றியம் எல்லப்பநாயுடுபேட்டை ஊராட்சி காந்திகிராமம் மற்றும் குப்பத்துப்பாளையம் பகுதி, 150க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு அத்தியாவசிய பொருள்களான அரிசி, மளிகை பொருள்கள், பால், பிரட், நாப்கின், வீட்டின் மேற்கூரை அமைக்க தார்ப்பாய் உள்ளிட்ட நிவாரணப் பொருள்கள் ஊராட்சி மன்ற தலைவர் ஈஸ்வரன், துணைத்தலைவர் கௌரி நாகராஜ் ஆகியோர் வழங்கி தொடங்கிவைத்தனர்.

செல்டர் டிரஸ்ட் நிறுவனர் சாலமோன்ராஜ் ஏற்பாட்டில் நடைபெற்ற நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சியில் சமூகப் பணியாளர் புதூர் நாகேஷ், வார்டு உறுப்பினர்கள் சுமதி நாகராஜ், சுப்பன், கம்சலா, ஊராட்சி செயலாளர் ஜானகிராமன் மற்றும் சமூக பணியாளர்கள் ஜெயபால், செல்வின், அருள், கோதண்டன், ஆகியோர் கலந்துகொண்டு 150க்கும் மேற்பட்ட வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வாழ்க்கையை நிலைநிறுத்துவதற்கான அத்தியாவசிய பொருட்களை தொடர்ந்து வழங்கினர். இந்நிகழ்வில் காந்தி கிராமம் மற்றும் குப்பத்துபாளையம் பகுதி குடும்பங்கள் அனைவரும் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

ABOUT THE AUTHOR

...view details