தமிழ்நாடு

tamil nadu

புரெவி புயல் எச்சரிக்கை: நெல்லையில் தேசிய பேரிடர் மீட்பு குழு!

By

Published : Dec 1, 2020, 3:29 PM IST

திருநெல்வேலி: மாவட்டத்திற்கு புரெவி புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 57 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் வந்துள்ளனர்.

நெல்லையில் தேசிய பேரிடர் மீட்பு குழு
நெல்லையில் தேசிய பேரிடர் மீட்பு குழு

நிவர் புயலை தொடர்ந்து வங்கக் கடலில் புரெவி என்ற புதிய புயல் உருவாகியிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் அதிக கனமழை பெய்யும் என அறிவித்துள்ளது.

இதையடுத்து திருநெல்வேலியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் மாவட்ட நிர்வாகம் தீவிரம் காட்டி வருகிறது. இதன் ஒரு பகுதியாக இன்று (டிச.1) மாவட்டத்திற்கு 57 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் வந்துள்ளனர்.

இவர்கள் விழுப்புரத்தில் இருந்து துணை கமாண்டர் தலைமையில் வந்துள்ளனர். இதைத் தொடர்ந்து துணை கமாண்டர் வைத்தியலிங்கம் மாவட்ட ஆட்சியருடன் ஆலோசனை நடத்தினார்.

பின்னர் 57 பேரும் மூன்று குழுவாக பிரிக்கப்பட்டு மாவட்டத்தில் உள்ள கடற்கரை பகுதி, தாமிரபரணி ஆற்றுப் பகுதிகளில் மீட்பு பணிகளை மேற்கொள்ள தயார் நிலையில் உள்ளனர்.

இதுகுறித்து தேசிய பேரிடர் மீட்புக் குழுவின் துணை கமாண்டர் வைத்தியலிங்கம் கூறும்போது, "திருநெல்வேலி மாவட்டத்திற்கு 57 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு குழுவினருடன் வந்துள்ளோம். தாழ்வான பகுதியில் வெள்ளம் சூழ்ந்தால் அங்கு வசிக்கும் மக்களை மீட்க தயாராக உள்ளோம்" என்றார்.

இதையும் படிங்க: நிவர் புயலால் ஏற்பட்ட சேதம்: ஓடிவந்து உதவிய தன்னார்வலர்கள்

ABOUT THE AUTHOR

...view details