தமிழ்நாடு

tamil nadu

'புதுச்சேரியில் ஆட்சியை கவிழ்த்து பாஜக ஜனநாயகப் படுகொலையை அரங்கேற்றியுள்ளது'

By

Published : Feb 27, 2021, 8:37 AM IST

திருநெல்வேலி: புதுச்சேரியில் ஆட்சியை கவிழ்த்து ஜனநாயகப் படுகொலையை பாரதிய ஜனதா அரசு அரங்கேற்றியுள்ளது என அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் சஞ்சய் தத் தெரிவித்துள்ளார்.

Congress General Secretary Sanjay Dutt
காங்கிரஸ் பொதுச் செயலாளர் சஞ்சய் தத்

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரும் தமிழ்நாடு பொறுப்பாளருமான சஞ்சய்தத் திருநெல்வேலியில் நேற்று (பிப்.26) செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.

அப்போது அவர் கூறுகையில், "பிப்ரவரி 27ஆம் தேதி முதல் மூன்று நாட்கள் ராகுல் காந்தி தமிழ்நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தேர்தல் பரப்புரையில் ஈடுபடுகிறார். பல்வேறு இடங்களில் பல்வேறு விதமான வகையில் மக்களை சந்திக்க இருக்கிறார். பாஜக இடும் கட்டளைகளை செயல்படுத்தும் அரசாக அதிமுக அரசு உள்ளது. இதற்கு காரணம் அவர்கள் செய்யும் ஊழல்கள் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுத்து விடக்கூடாது என்பது தான் காரணம்.

காங்கிரஸ் பொதுச் செயலாளர் சஞ்சய் தத்

தன்னை விவசாயி என சொல்லிக் கொள்ளும் தமிழ்நாடு முதலமைச்சர், மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களை எதிர்க்காமல் மௌனம் சாதித்து விவசாயிகளுக்கு துரோகம் இழைத்துள்ளார். வரும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பின்பு எடப்பாடி பழனிசாமி விவசாயம் செய்ய சென்றுவிடுவார்.

பாண்டிச்சேரியில் மக்களுக்கான நலத் திட்டப் பணிகளை நிறைவேற்றிய நாராயணசாமி தலைமையிலான ஆட்சியை கவிழ்த்து அங்கு பாரதிய ஜனதா கட்சி ஜனநாயகப் படுகொலையை அரங்கேற்றியுள்ளது" என்றார்.

இதையும் படிங்க: 40 ஆண்டுக்கால போராட்டம் - வன்னியர் உள் இட ஒதுக்கீடு குறித்து ராமதாஸ் அறிக்கை

ABOUT THE AUTHOR

...view details