தமிழ்நாடு

tamil nadu

குக்கர் சின்னத்தால் அதிமுக தோல்வி - அதிமுக அமைப்பு செயலாளர் கருப்பசாமிபாண்டியன்

By

Published : Sep 24, 2021, 7:35 AM IST

v

சசிகலா குடும்பத்தினர் செய்த துரோகத்தால் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்ததாக அதிமுக அமைப்பு செயலாளரும், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான கருப்பசாமிபாண்டியன் தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் விடுபட்ட ஒன்பது மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் 6,9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெறுகிறது. திருநெல்வேலி மாவட்டத்திற்கு அதிமுக சார்பில் தலைமை தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் தளவாய்சுந்தரம் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது, ஊரக உள்ளாட்சி தேர்தல் வெற்றி தேர்தலாக அதிமுகவிற்கு அமையும் என்ற சந்தேகம் இல்லை. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அனைத்து உள்ளாட்சி பதவிகளிலும் அதிமுக பெருவாரியான வாக்குகள் பெற்று வெற்றி பெறும்.

ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், ஊரக உள்ளாட்சி தேர்தல் பொறுப்பாளர்களை அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து ஆலோசனை மேற்கொள்ள உள்ளனர்.

கூட்டுறவு சங்க நகை கடன் பெற்று அதில் முறைகேடு நடந்ததாக கூட்டுறவுத்துறை அமைச்சர் நெல்லையில் உண்மைக்குப் புறம்பான தகவலை தெரிவித்துள்ளார். கூட்டுறவு கடன் வாங்கியதில் முறைகேடு செய்தவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கவர்னரிடம் கோப்பு நிலுவையில் இருக்கும்போதே சட்டவிதி 162 பயன்படுத்தி 7.5 விழுக்காடு மருத்துவ மாணவர் இட ஒதுக்கீடை முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்தார். இது போன்ற நடவடிக்கை வேறு எந்த முதலமைச்சரும் செய்தது கிடையாது எனவும் தெரிவித்தார்.

அதிமுகவினர் செய்தியாளர்கள் சந்திப்பு

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அதிமுகவின் அமைப்புச் செயலாளரும் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான கருப்பசாமிபாண்டியன் கூறியதாவது, சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவால் பயன்பெற்ற ஒரு குடும்பத்தின் (சசிகலா) துரோகத்தால் தான் அதிமுக தோல்வி அடைந்து விட்டது. 46 தொகுதியில் குக்கர் சின்னம் பெற்ற வாக்குகளால் தான் அதிமுக தோல்வி அடைந்தது.

கரோனா தொற்று பரவலை தடுக்கவே அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் ஓபிஎஸ், இபிஎஸ் ஆகியோர் பொது மக்களை நேரடியாக சந்தித்து பரப்புரை செய்யும் முடிவை எடுக்கவில்லை. அப்படி அவர்கள் முடிவு எடுத்தால் நோய் பரவுவதற்கு அதிமுக தான் காரணம் என திமுகவினர் பழி சுமத்துவார்கள் என தெரிவித்தார்.

இதையும் படிங்க: 'குக்கர்' சின்னத்தை நீக்க வேண்டும்: அமமுக கோரிக்கை

ABOUT THE AUTHOR

...view details