தமிழ்நாடு

tamil nadu

தேனியில் கலைஞர் நூற்றாண்டு விழா; 1,360 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா..!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 30, 2023, 1:41 PM IST

Minister I.Periyasamy: தேனியில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் நடைபெற்ற சிறப்பு பட்டா வழங்கும் நிகழ்ச்சியில் 1,360 பயனாளிகளுக்கு பட்டா வழங்கப்பட்டது.

தேனியில் 1,360 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா
தேனியில் 1,360 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா

தேனியில் 1,360 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி

தேனி: தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே உள்ள அரசு தோட்டக்கலைக் கல்லூரியின் அரங்கில், தேனி மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா தலைமையில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில், கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சிறப்பு பட்டா வழங்கும் முகாம் நடைபெற்றது.

இந்நிகழ்வில், தமிழக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி பங்கேற்றார். மேலும், இந்த சிறப்பு முகாமில் ஆயிரத்து 360 பயனாளிகளுக்கு 8.84 கோடி ரூபாய் மதிப்பிலான விலையில்லா வீட்டுமனை பட்டா வழங்கினார். பின்னர் விழா மேடையில் அமைச்சர் சிறப்புரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், “தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து, தமிழகம் முழுவதும் வீடற்ற ஏழை மக்கள், பழங்குடியின மக்கள் உள்ளிட்ட பலருக்கு அரசுத் தரப்பில் 100 இடங்களில் வீட்டுமனைப் பட்டா வழங்க சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது. அந்த வகையில், தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் ஆயிரத்து 360 பயனாளிகளுக்கு, 8.84 கோடி ரூபாய் மதிப்பிலான வீட்டு மனைப் பட்டாக்களை, மக்களுக்கு விலையில்லாமல் வழங்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:நிலவிற்கு மனிதனை அனுப்பி பூமிக்கு பாதுகாப்பாக கொண்டு வருவதே குறிக்கோள் - இஸ்ரோ தலைவர் சோமநாத்

மேலும், இன்னும் பட்டா வழங்கப்படாத மக்களுக்கும், மீதம் உள்ள 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோரிக்கைகளையும் நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும், அரசுப் பள்ளியில் பயின்ற மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் என தமிழக முதலமைச்சரால் மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகிறார்" எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர் ஐ.பெரியசாமி, “மகளிர் உரிமை தொகைத் திட்டம் மூலம், தற்போது வரை ஒரு கோடியே 13 லட்சத்திற்கும் மேற்பட்ட நபர்கள் பயனடைந்துள்ளனர். மேலும், தொடர்ந்து மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்காக மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

அவ்வாறு, கோரிக்கை முன்வைக்கும் பெண்களுக்கு, மகளிர் உரிமை தொகை பெற தகுதி இருக்கும் பட்சத்தில் அரசு நிச்சயம் அவர்களுக்கு உரிமைத் தொகையை வழங்கத் தயாராக உள்ளது" எனக் கூறினார். இந்நிகழ்வில், கம்பம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இராமகிருஷ்ணன், ஆண்டிபட்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் உள்பட அரசுத்துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க:சென்னை மாநகரின் நிலை என்னவாகுமோ? நிவாரணப் பணிகளை துரிதபடுத்த ராமதாஸ் வலியுறுத்தல்!

ABOUT THE AUTHOR

...view details