தமிழ்நாடு

tamil nadu

கம்பம் தொகுதியில் திமுக வேட்பாளர் ராமகிருஷ்ணன் வெற்றி!

By

Published : May 3, 2021, 9:44 AM IST

கம்பம் தொகுதியில் திமுக வெற்றி
கம்பம் தொகுதியில் திமுக வெற்றி ()

தேனி: கம்பம் தொகுதியில் திமுக வேட்பாளர் ராமகிருஷ்ணன் 42ஆயிரத்து, 413 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

கம்பம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் சையதுகானை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் ராமகிருஷ்ணன் 42ஆயிரத்து, 413 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

மொத்தமுள்ள 28 சுற்றுகளிலும் திமுக வேட்பாளர் ராமகிருஷ்ணன் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வந்தார். இந்நிலையில் தற்போது தபால் வாக்குகள் எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

இதில், திமுக வேட்பாளர் ராமகிருஷ்ணன் 42ஆயிரத்து, 413 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

வாக்குகள் நிலவரம்

  • திமுக - ராமகிருஷ்ணன் - ஒரு லட்சத்து, 04ஆயிரத்து, 800 வாக்குகள்
  • அதிமுக - சையதுகான் - 62ஆயிரத்து, 387 வாக்குகள்
  • அமமுக - சுரேஷ் - 14ஆயிரத்து, 536 வாக்குகள்
  • மநீம - வெங்கடேஷ் - நான்காயிரத்து, 647 வாக்குகள்
  • நாம் தமிழர் - அனீஷ் பாத்திமா - 12ஆயிரத்து, 347 வாக்குகள்
  • நோட்டா - ஆயிரத்து, 659 வாக்குகள்

கம்பம் தொகுதியில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை தேர்தல் நடத்தும் அலுவலரிடமிருந்து திமுக வேட்பாளர் ராமகிருஷ்ணன் பெற்றுக்கொண்டார்.

கடந்த 2006, 2009 (இடைத்தேர்தல்), 2011 ஆகிய தேர்தல்களில் ராமகிருஷ்ணன் கம்பம் தொகுதியில் வெற்றி பெற்றார். கடைசியாக 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் கம்பம் தொகுதியில் தோல்வியை தழுவிய ராமகிருஷ்ணன் தற்போது மீண்டும் வெற்றி பெற்றுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details