தமிழ்நாடு

tamil nadu

தேனி மாவட்ட ஆட்சியர் பெயரில் பரவும் போலி வாட்ஸ்அப் மெசேஜ்கள்!

By

Published : Sep 25, 2022, 12:25 PM IST

மாவட்ட ஆட்சியர் பெயரில் பரவும் போலி வாட்ஸாப் மெசேஜ்கள்...!

தேனி மாவட்ட ஆட்சியர் பெயரில் ஓர் போலி வாட்ஸ்அப் குறுஞ்செய்தி பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டது. இந்நிலையில், இதை யாரும் நம்பி ஏமாற வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல் விடுத்துள்ளார்

தேனி மாவட்ட ஆட்சியர் முரளிதரன் பெயரில் போலி வாட்ஸ்அப் கணக்கு உருவாக்கி அதிலிருந்து, அரசு அலுவலர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்பட்டதாக மாவட்ட ஆட்சியருக்குத் தகவல் கிடைத்தது. ஆட்சியரின் புகைப்படத்தை முகப்புப் படமாக வைத்து 83830 32114 என்ற எண்ணில் இருந்து அரசு அலுவலர்களுக்கு மற்றும் பொதுமக்களுக்கு ஆட்சியர் அவர்கள் நலம் விசாரிப்பது போல் குறுஞ்செய்தி அனுப்பப்பட்டது.

ஆட்சியர் பெயரில் போலியாக வாட்ஸ்அப்பில் அனுப்பப்படும் இந்தக் குறுஞ்செய்தி தவறான செயல்களுக்கு வித்திடும் என்றும்; எனவே அரசு அலுவலர்கள், பொதுமக்கள் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும் என்று தேனி மாவட்ட ஆட்சியர் முரளிதரன் அறிவுறுத்தியுள்ளார்.

மேலும், இந்தப் போலி வாட்ஸ்அப் கணக்கு குறித்து சைபர் க்ரைம் காவல் துறையினரிடம் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். ஏற்கெனவே தேனி மாவட்ட ஆட்சியரின் பெயரில் போலி வாட்ஸ்அப் கணக்கு உருவாக்கி பொதுமக்களிடம் பணம் பறிக்கும் நோக்கத்தோடு குறுஞ்செய்தி அனுப்பும் சம்பவம் நடைபெற்றிருந்தது.

இந்நிலையில், மீண்டும் மாவட்ட ஆட்சியர் புகைப்படத்தை பயன்படுத்தி போலி whatsapp கணக்கில் இருந்து பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்புவது தொடர்கதை ஆகி வருகிறது.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் 30 அரசு செவிலியர் கல்லூரிகள் தொடங்க ஒன்றிய அரசு நிதி வழங்க வேண்டும் - அமைச்சர் கோரிக்கை

ABOUT THE AUTHOR

...view details