தமிழ்நாடு

tamil nadu

கொடநாடு கொலை வழக்கு: அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பும் ஸ்டாலின்!

By

Published : Nov 9, 2020, 3:05 AM IST

நீலகிரி: கொடநாடு கொலை வழக்குகளில் சந்தேகத்திற்கு இடமானவர்களை எடப்பாடியார் அருகில் வைத்துக்கொண்டால் எப்படி உண்மை வெளிவரும் என ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஸ்டாலின்
ஸ்டாலின்

நீலகிரி மாவட்டம் திமுக சார்பில், குன்னூர் தனியார் ஓட்டலில் தமிழகத்தை மீட்போம் என்ற தலைப்பில் காணொலி காட்சி மூலம் திமுக தலைவர் ஸ்டாலின் பேசினார். இதில், நீலகிரி மாவட்ட திமுக சார்பாக தொகுதி எம்பி ராசா, மாவட்ட செயலாளர் முபாரக், முன்னாள் அமைச்சர் ராமச்சந்திரன் உள்பட பல நிர்வாகிகள் பங்கேற்றனர்.

திமுக சார்பில் பல்வேறு போராட்டங்களில் பங்கேற்று சிறை சென்ற 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பொற்கிழி மற்றும் பத்தாயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. இதில், காணொலி காட்சி மூலம் உரையாற்றிய ஸ்டாலின், "கொடநாட்டில் 11 பேர் கொண்ட கும்பல் காவலாளி ஓம்பகதூரை கட்டி போட்டு, அரசு ஆவணங்களை கொள்ளை அடித்து சென்றது. ஓம்பகதூரும் மூச்சுத்திணறி இறந்தார். ஜெயலலிதா கார் டிரைவர் கனகராஜ் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்தபிறகு மர்மமான முறையில் இறந்தார்.

கேரளாவை சேர்ந்த சயான் மனைவி மற்றும் குழந்தை இறந்தனர். தலைமறைவாகிவிட்ட கிருஷ்ண பகதூரை இதுவரை காவல்துறையினர் கைது செய்யவில்லை. ஜெயலலிதா முதலமைச்சராக இருக்கும் போது இந்த பங்களாவில் இருந்துள்ளார். அரசு கோப்புக்கள் திருடப்பட்டுள்ளது என்பது தெளிவாகிறது.

ஸ்டாலின்

ஆனால், காவல்துறை சிறு பொருட்கள் திருடப்பட்டது என வழக்குகளில் தெரிவித்துள்ளனர். மாபெரும் குற்ற சம்பவங்கள் நடந்துள்ள நிலையில், எடப்பாடி பழனிச்சாமி பெயரும் நேரடியாக குற்றச்சாட்டில் உள்ளது. இந்நிலையில், இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட கூடலூரை சேர்ந்த சஜீவனுக்கு அதிமுகவில் வர்த்தக அணி மாநில பதவி கொடுக்கப்பட்டுள்ளது.

ஊட்டியில் முதலமைச்சர் பங்கேற்ற அரசு கூட்டங்களில் சஜீவன் பங்கேற்றுள்ளார். கொடநாடு கொலை வழக்குகளில் சந்தேகத்திற்கு இடமானவர்களை எடப்பாடியார் அருகில் வைத்துக்கொண்டால் எப்படி உண்மை வெளிவரும்" என்றார்.

இந்த கூட்டத்தில் சமூக இடைவெளி இல்லாமலும், 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் தள்ளாத வயதிலும் வரவழைக்கப்பட்டது அதிருப்தியை ஏற்படுத்தியது.

ABOUT THE AUTHOR

...view details