தமிழ்நாடு

tamil nadu

உரிய அனுமதியின்றி செயல்பட்ட மழலையர் பள்ளிக்குச் சீல் - கல்வி அலுவலர்கள் அதிரடி

By

Published : Mar 16, 2020, 12:28 PM IST

நீலகிரி: குன்னூர் பகுதியில் உரிய அனுமதியின்றி செயல்பட்டுவந்து மழலையர் பள்ளிக்கு மாவட்ட கல்வி அலுவலர்கள் சீல்வைத்துள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

sealed-kindergarten-without-proper-permission-education-officers-action
sealed-kindergarten-without-proper-permission-education-officers-action

நீலகிரி மாவட்ட கல்வித் துறையின் கீழ் இயங்கும் தனியார் பள்ளிகளுக்கு 2009ஆம் ஆண்டு கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் தொடங்க அனுமதி, அங்கீகாரத்துடன் செயல்பட வேண்டுமென கல்வித் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் கடந்தாண்டில் மாவட்டத்தில் மழலையர் பள்ளி எல்கேஜி, யுகேஜி உள்ளிட்ட ஐந்தாம் வகுப்பு வரையிலான பள்ளிகள் தொடர்ந்து அங்கீகாரமின்றி செயல்பட்டுவந்தது தெரியவந்தது. இதனையடுத்து உரிய அனுமதியின்றி செயல்பட்டுவந்த பெரும்பாலான பள்ளிகளின் மீது மாவட்ட கல்வி நிர்வாகம் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

இந்நிலையில் வண்டிச்சோலை மழலையர் பள்ளி எந்த அனுமதியும் பெறாமல் 30 மழலையர்களுடன் செயல்பட்டுவந்ததும், அப்பள்ளி உயர்மின் அழுத்தக் கம்பி செல்லும் இடத்தில் இயங்கி வந்ததும் தெரியவந்தது. இது தொடர்பாகக் கல்வித் துறையின் சார்பாக கடந்த 2ஆம் தேதி அப்பள்ளிக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.

உரிய அனுமதியின்றி செயல்பட்ட மழலையர் பள்ளிக்கு சீல்

இதற்கு அப்பள்ளியின் சார்பில் எந்தவித பதிலும் அளிக்கப்படாததால், நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா உத்தரவின்பேரில், வட்டாட்சியர் குப்புராஜ் முன்னிலையில் குன்னூர் மாவட்ட கல்வி அலுவலர் பாண்டியராஜன் உள்ளிட்ட ஊழியர்களால் பள்ளிக்குச் சீல்வைக்கப்பட்டது. மேலும் ஏதேனும் அசம்பாவிதங்கள் நடக்காமலிருக்க வெலிங்டன் காவல் துறையினர் பாதுகாப்புப் பணிக்காக உடனிருந்தனர். அனுமதியின்றி செயல்பட்டுவந்து மழலையர் பள்ளிக்குச் சீல்வைத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:தனியார் ஆய்வகங்களில் கோவிட்-19 பரிசோதனைக்கு தடை!

ABOUT THE AUTHOR

...view details