தமிழ்நாடு

tamil nadu

Nilgiris leopard: நீலகிரியில் இரவில் உலாவும் சிறுத்தைகள்- மக்கள் அதிர்ச்சி

By

Published : Nov 23, 2021, 4:36 PM IST

leopard
leopard ()

நீலகிரியில் இரவில் உலாவரும் சிறுத்தைகளால் (Nilgiris leopard) பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.

நீலகிரி : நீலகிரி மாவட்டம் உதகமண்டலம் கூடலூரை அடுத்து பந்தலூர் என்ற கிராமம் அமைந்துள்ளது. மலைப் பகுதியை ஒட்டியுள்ள இந்த ஊருக்குள் வனவிலங்குகள் அடிக்கடி புகுந்துவிடும்.

மேலும் இந்த விலங்குகள் அங்குள்ள விவசாய நிலங்கள் மற்றும் வீடுகளை சேதப்படுத்திவருகின்றன. இந்நிலையில் நேற்றிரவு (நவ.22) நேரத்தில் பந்தலூர் டவுன் பகுதியை ஒட்டியுள்ள பகுதியில் சிறுத்தை (Nilgiris leopard) உலா வருவது அப்பகுதியிலுள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

Nilgiris leopard: நீலகிரியில் இரவில் உலாவும் சிறுத்தைகள்- மக்கள் அதிர்ச்சி

இதனால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். இரவு நேரங்களில் வரும் சிறுத்தை கண்காணித்து இதனை உடனடியாக பிடிக்க வேண்டும் எனப் பொதுமக்கள் வனத்துறையினருக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

இதையும் படிங்க : சிறுத்தைகள் சண்டையால் குட்டி சிறுத்தை உயிரிழப்பு

ABOUT THE AUTHOR

...view details