தமிழ்நாடு

tamil nadu

பட்டாம்பூச்சி பூங்காவாக உருவெடுக்கும் குப்பைமேடு!

By

Published : Jun 5, 2021, 10:51 PM IST

பட்டாம்பூச்சி பூங்கா
பட்டாம்பூச்சி பூங்கா ()

நீலகிரி: குன்னூரில் பட்டாம்பூச்சி பூங்கா உருவாக்க செடிகள், கோரை புற்கள் நடவு பணி நடைபெற்றது.

குன்னூரில் சுற்றுலாப்பயணிகள் பார்வையிட சிம்ஸ் பூங்கா, காட்டேரி பூங்கா ஆகியவை உள்ளன. இந்நிலையில், கண்களைக் கொள்ளை கொள்ளும் வண்ணங்களுடன் பறக்கும் பட்டாம்பூச்சிக்காக பூங்கா அமைக்கும் பணியில் களம் இறங்கியுள்ளது தன்னார்வ அமைப்பு.

பட்டாம்பூச்சி பூங்கா

குன்னூர் வசம்பள்ளம் அருகே நகராட்சி இடத்தில் அமைந்துள்ள குப்பைமேட்டை, கிளீன் குன்னூர் அமைப்பினர் பொலிவுப்படுத்தி மலர் பூங்காவாக மாற்றினர். இந்த மலர் பூங்கா அருகே குப்பை மேடாக இருந்த ஒரு ஏக்கர் பரப்பளவு இடத்தை, மேம்படுத்தி பட்டாம்பூச்சி பூங்காவாக மாற்றும் முயற்சியை தன்னார் அமைப்பினர் மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்காக, வைன்டர் பிளை குழுவினர், அப்ஸ்டிரீம் எக்காலஜி குழுவினருடன் இணைந்து செடிகள், கோரை புற்கள் ஆகியவற்றை வளர்க்க இன்று (ஜூன் 5) நடவு பணியில் ஈடுபட்டனர். நகராட்சி ஆணையர் பாலமுருகன் முதல் செடியை நட்டு வைத்து, நடவு பணிகளை தொடங்கிவைத்தார். தொடர்ந்து தூய்மைப்பணியாளர்களும் செடிகள், கோரை புற்களை நடவு செய்தனர்.

இதையும் படிங்க:தமிழ்நாட்டில் 12ஆம் வகுப்பு தேர்வு ரத்து

ABOUT THE AUTHOR

...view details