தமிழ்நாடு

tamil nadu

குன்னூரை பொலிவுப்படுத்தும் கிளீன் குன்னூர் தன்னார்வ குழு!

By

Published : Sep 18, 2020, 12:14 PM IST

நீலகிரி: மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரியும் இளைஞர்கள், டாக்டர், பொறியாளர்கள் என அனைவரும் ஒன்றிணைந்து, குன்னூரை பொலிவுப்படுத்த தத்ரூபமான ஓவியங்கள் வரைந்து வருவது வரவேற்பை பெற்றுள்ளது.

குன்னூரை பொலிவு படுத்தும் கிளீன் குன்னூர் தன்னார்வ குழு
குன்னூரை பொலிவு படுத்தும் கிளீன் குன்னூர் தன்னார்வ குழு

நீலகிரி மாவட்டம், குன்னூர் பகுதியை பூர்வீகமாக கொண்டவர்கள், சென்னை, மும்பை, பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் மென்பொருள் நிறுவனங்கள் உள்பட பல நிறுவனங்களில் பணிபுரிந்து வந்தனர்.

இந்நிலையில், கரோனா பாதிப்பால், பலரும் குன்னூருக்கே திரும்பிய நிலையில், பலரும் வீடுகளில் பணியாற்றுகின்றனர். இவர்கள், டாக்டர்கள், பொறியாளர்கள், ஆசிரியர்கள் அடங்கிய கிளீன் குன்னூர் தன்னார்வ குழுவினருடன் இணைந்து குன்னூரை தூய்மையாக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக, சாலையோரங்களில் உள்ள தடுப்பு சுவர்களில், வன விலங்குகள், பறவைகளின் ஓவியங்கள் வரைந்து வருகின்றனர். இயற்கை சுற்றுச்சூழல், வன விலங்குகளை பாதுகாப்பதை வலியுறுத்தி வரைந்த, இந்த ஓவியங்கள் பார்வையாளர்களை வசீகரிக்கிறது. மேலும் உள்ளுா் மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

குன்னூரை பொலிவு படுத்தும் கிளீன் குன்னூர் தன்னார்வ குழு

இதுகுறித்து அவர்கள் கூறும்போது, ”வார இறுதியில் சாலையோரங்களில் கொட்டப்படும் பழைய பிளாஸ்டிக் பொருட்களை எடுத்து சுத்தம் செய்து நகராட்சியிடம் ஒப்படைத்து வருகிறோம். மேலும் சுற்றுச்சுவரை பொலிவுப்படுத்தி ஒவியங்கள் வரைந்துவருகிறோம். நீலகிாி மாவட்டத்திற்கு வருபவர்கள் குப்பை கொட்டாமல் சுத்தமாக வைக்கவும் விழிப்பணா்வு ஏற்படுத்திவருகிறோம்” என்றார்.

இதையும் படிங்க: பருவத் தேர்வின்போது மாணவர்கள் புத்தக குறிப்பேடு பயன்படுத்த அனுமதி - புதுச்சேரி பல்கலை. அறிவிப்பு

ABOUT THE AUTHOR

...view details