தஞ்சாவூர்:தாளக்குடி கிராமத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவரது மகள் விஷாலி (16). இவர் தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டையை அடுத்த பசுபதி கோவிலில் உள்ள தனியார் பெண்கள் மேல்நிலையில் +2 படித்து வந்துள்ளார். மாணவி விஷாலி நேற்று (13.03.2023) காலை பள்ளியில் பொதுத்தேர்வு எழுதிவிட்டு மாலை தனது உறவினரான பிரதீப் என்பவருடன் இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பியுள்ளார்.
அப்போது நல்லிச்சேரி என்ற இடத்தில் வந்து கொண்டிருந்த அவர்கள் சாலை வளைவில் திரும்பும்போது இரு சக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்திலிருந்த மரத்தில் மோதியது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தனர். தகவல் அறிந்து வந்த பள்ளி ஆசிரியைகள், உறவினர்கள் மாணவியின் உடலை பார்த்துக் கதறி அழுதனர்.