தமிழ்நாடு

tamil nadu

புளியங்குடியில் எந்தவித அடிப்படை வசதிகளுமின்றி வாழும் மலைவாழ் கிராம மக்கள்!

By

Published : Jul 26, 2022, 3:45 PM IST

எந்தவித அடிப்படை வசதிகள் இன்றி வாழும் மலைவாழ் கிராம மக்கள்
எந்தவித அடிப்படை வசதிகள் இன்றி வாழும் மலைவாழ் கிராம மக்கள் ()

தென்காசி, புளியங்குடியில் எந்தவித அடிப்படை வசதிகளும் இன்றி வாழும் மலைவாழ் கிராம மக்கள், அடிப்படை வசதிகளை செய்து தருமாறு மாவட்ட நிர்வாகத்திடமும், தமிழ்நாடு அரசிடமும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தென்காசி மாவட்டம் புளியங்குடியில் சுமார் 10 ஆண்டிற்கும் மேலாக எந்தவித அடிப்படை வசதிகளும் இன்றி மலைவாழ் கிராம மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் தினசரி கூலி வேலைக்குச்செல்வது வழக்கம். மேலும் தங்களுடைய குழந்தைகளின் படிப்பிற்காக தற்பொழுது புளியங்குடியில் ஒரு பகுதியில் வாடகை வீட்டில் சுமார் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்தப் பகுதியில் உள்ள குழந்தைகள் பெரும்பாலானோர் வாய் பேச முடியாத மற்றும் காதுகேளாத மாற்றுத்திறனாளிகளாக உள்ளனர். இந்த குழந்தைகளுக்கு அரசினுடைய உதவி தற்போது வரை கிடைக்கப்பெறாமல் உள்ளது. எனவே தங்களுடைய பகுதிக்கு மாவட்ட நிர்வாகமும், தமிழ்நாடு அரசும் ஏதாவது உதவி செய்யுமாறு அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் இவர்களுக்கு தமிழ்நாடு கிராம வங்கியின் மூலமாக எந்தவித முன்பணமும் இன்றி வங்கிப்பணியாளர்கள் மூலம் புதிய வங்கிக்கணக்கு நேரடியாக அவர்களிடத்தில் சென்று, முதல்முறையாக தொடங்கப்பட்டுள்ளது. இதனால் அவர்கள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

எந்தவித அடிப்படை வசதிகள் இன்றி வாழும் மலைவாழ் கிராம மக்கள்

இதையும் படிங்க:ஆவின் பால் பாக்கெட்டில் செஸ் ஒலிம்பியாட் விளம்பரம்

ABOUT THE AUTHOR

...view details