தமிழ்நாடு

tamil nadu

”விவசாய கடன் ரத்து தேர்தலுக்கானது விவசாயிகள் நலனுக்காக அல்ல” - ஸ்டாலின்

By

Published : Feb 7, 2021, 5:24 PM IST

தென்காசி : விவசாய கடன் ரத்து என்பது தேர்தலுக்கானதே தவிர விவசாயிகள் நலனுக்காக அல்ல என தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியில் நடந்த உங்கள் தொகுதியில் ஸ்டாலின் நிகழ்ச்சியில் திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார் .

Stalin campaign in thenkasi
Stalin campaign in thenkasi

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக தலைவர் ஸ்டாலின் கலந்துகொண்டு சங்கரன்கோவில், வாசுதேவநல்லூர், கடையநல்லூர், தென்காசி, ஆலங்குளம் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதி பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு அவர்களின் குறைகளையும் கேட்டறிந்து பொதுமக்களுடன் கலந்துரையாடினார். முன்னதாக தென்காசி மாவட்டத்தில் பல்வேறு துறையில் சிறந்து விளங்கியவர்களுக்கு சால்வை அணிவித்து நினைவுப்பரிசு வழங்கி கௌரவித்தார்.

இதையடுத்து,நிகழ்ச்சியில் பேசிய அவர், "முதமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடைசி நேரத்திலும் நாடகத்தை நடத்தி விவசாயிகளை ஏமாற்றி வருகிறார். திமுக ஆட்சி அமைந்தவுடன் விவசாய கடன் ரத்து செய்யப்படும் என சொன்னதும் விவசாய கடன்களை ரத்து செய்வதாக முதலமைச்சர் அறிவித்துள்ளார். விவசாய கடன்களை இன்னும் ரத்து செய்யவில்லை அதிமுக அரசு ரத்து செய்யப்போவதாகத்தான் அறிவித்துள்ளனர். விவசாயிகள் கடன்கள் குறித்து இப்போதுதான் முதல்வருக்கு தெரியவந்ததா?. விவசாய கடன் ரத்து என்பது தேர்தலுக்கானதே தவிர விவசாயிகளுக்காக அல்ல. முதலமைச்சர் சுயநலனுக்கானதே தவிர விவசாயிகளின் நலுனுக்காக அல்ல” எனத் தெரிவித்தார் .

ABOUT THE AUTHOR

...view details