தமிழ்நாடு

tamil nadu

அரசுப் பள்ளி மாணவர்கள் 52 பேருக்கு திடீர் காய்ச்சல்

By

Published : Sep 17, 2021, 5:34 PM IST

Updated : Sep 20, 2021, 3:24 PM IST

fever in 52 government school students in tenkasi

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அரசுப் பள்ளி மாணவர்கள் 52 பேர் திடீர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பது பெரும் அச்சத்தை ஏற்பட்டுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள மாறாந்தை அரசு பள்ளி மாணவர்கள் 52 பேருக்கு தீடீர் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மாணவர்கள், ஆசிரியர்கள் உள்பட 104 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் அப்பள்ளிக்கு பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் செப்.1ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டன. இதையடுத்து கோயம்புத்தூர், நாமக்கல், திருச்சி, ஈரோடு, திருப்பூர் உள்ளிடப் பல்வேறு மாவட்டங்களில் ஆசிரியர்கள், மாணவர்கள் என 140க்கும் மேற்பட்டோருக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே நேற்று(செப்.16) பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பள்ளிகள் திறக்கப்பட்டதலிருந்து 148 மாணவர்களுக்கு கரோனா தொற்று உறுதியாகி உள்ளது எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:அரசுப்பள்ளி மாணவர்களிடையே பரவும் கரோனா

Last Updated :Sep 20, 2021, 3:24 PM IST

ABOUT THE AUTHOR

...view details